Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் ட்ரைலர்.. ஆரம்பமானது கோப்ராவின் வேட்டை!!

Sekar August 25, 2022 & 17:55 [IST]
வேற லெவல் ட்ரைலர்.. ஆரம்பமானது கோப்ராவின் வேட்டை!!Representative Image.

நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தான் கோப்ரா. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கோப்ரா படத்தின் ரிலீஸ் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்பட்டு பின்னர் பல காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில், தற்போது ஒருவழியாக விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 31 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக விக்ரமுக்கு கோப்ரா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என கொண்டாடி வருகின்றனர்.

ட்ரைலர் இதோ. பார்த்துட்டு எப்படியிருக்குனு கமெண்டில் சொல்லுங்க.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்