Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீர் மரணம்.. கடும் சோகத்தில் குஷ்பூ.. ட்விட்டரில் உருக்கம்!!

Sekar Updated:
திடீர் மரணம்.. கடும் சோகத்தில் குஷ்பூ.. ட்விட்டரில் உருக்கம்!!Representative Image.

பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூவின் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

குஷ்பூவின் மூத்த சகோதரர் உடல்நலக்குறைவால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், தனது சகோதரரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்திலும், குஷ்பூ பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு விருப்பமானவர்களுடன் காலம் முழுக்க இருக்க வேண்டும் என நினைத்தாலும், பிரிய வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வரும். என் சகோதரரின் பயணம் இன்றோடு முடிந்தது. அவரின் அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு எப்போதும் இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றிகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

சகோதரரின் மறைவால் நடிகை குஷ்பூ சோகத்தில் உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்