Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதலில் ரிஜெக்ட் செய்யப்பட்டு.. மீனாவை வித்யாசாகர் திருமணம் செய்தது இப்படித்தானா?

Sekar July 01, 2022 & 15:31 [IST]
முதலில் ரிஜெக்ட் செய்யப்பட்டு.. மீனாவை வித்யாசாகர் திருமணம் செய்தது இப்படித்தானா?Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கோலோச்சிய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஜூன் 28ஆம் தேதி இரவு தனது 48வது வயதில் காலமானார். 

புறாக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட காற்றுடன் தொடர்பு கொண்டதால், ஒவ்வாமை ஏற்பட்டு அது தீவிரமான தொற்றை உண்டாக்கியதால் அவரது நுரையீரல் சேதமடைந்ததாதே அவரது மரணத்திற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஜூன் 29ஆம் தேதி வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மீனா மற்றும் வித்யாசாகர் ஜூலை 12, 2009 அன்று திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு பத்து வயது மகள் நைனிகா உள்ளார். இவர் அட்லீ இயக்கிய தெறி படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்த நடிகையும் ஆவார். 

மீனா பல சந்தர்ப்பங்களில் தனது கணவரும் தானும் மிகவும் அன்பான இல்லற வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு தனது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தபோது அவர் பெரும் ஆதரவாக இருந்ததாகவும் பகிர்ந்து கொண்டார். அவர் நடுவராக பங்கேற்ற ஒரு ரியாலிட்டி ஷோவின் போது தான் திருமண அழைப்பு விடுத்த வித்யாசாகரை முதலில் நிராகரித்ததையும் அவர் வெளிப்படுத்தினார்.

மீனாவின் குடும்பத்தினர் பொருத்தமான வரன் தேடும் போது அவருக்கு பொருந்திய ஜாதகம் வித்யாசாகரின் ஜாதகம். ஆனால் மீனா வித்யாசாகரை சந்தித்து பேசியபோது அவர்களின் வெவ்வேறு தொழில்கள் மற்றும் பார்வைகளால் மீனா ஈர்க்கப்படவில்லை. இதை சில நாட்களுக்குப் பிறகு மீனாவே வித்யாசாகருக்கு தெரியப்படுத்தியுள்ளார். வித்யாசாகர் அந்த முடிவை மனதார ஏற்றுக்கொண்டு சகஜமாக கடந்து சென்றுவிட்டார்.

இருப்பினும் மீனாவின் அத்தைகளில் ஒருவர், மீனா ஒரு நல்ல நபரை இழந்துவிட்டதாகக் கண்டிப்பாகச் சொன்னார். அதன் பிறகு தான் மீனா அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்காக ஒருபோதும் வருத்தப்படவில்லை. 

வித்யாசாகருடன் 13 வருட திருமண பந்தத்தில் ஒன்றாக கழித்த மீனா தற்போது அவர் இல்லாமல் வாடும் நிலையில், முதலில் மீனா வித்யாசாகரை நிராகரித்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்