Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றைய ரிலீஸ்... சுடச்சுடத் தகவல்கள்! நீங்கள் இந்த வார இறுதியில் கண்டு களிக்க வேண்டிய திரைப்படங்கள் இதோ!

UDHAYA KUMAR July 01, 2022 & 07:34 [IST]
இன்றைய ரிலீஸ்... சுடச்சுடத் தகவல்கள்! நீங்கள் இந்த வார இறுதியில் கண்டு களிக்க வேண்டிய திரைப்படங்கள் இதோ!Representative Image.

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்கள் பெரிய அளவில் வெளிவராமல், சில முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளுக்கே செல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் நிகழ்வுகள் கூட சாதாரணமாக நடந்தேறியது. காரணம் கொரோனா தொற்று. இப்போது அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மீண்டும் திரையரங்களுக்கு மக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியே அதற்கு சாட்சி. 

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியாகி, இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்புஃல்லாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தைத் தவிர்த்து இன்னும் பல படங்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளன. 

யானை

Yaanai - Official Trailer | Hari | Arun Vijay | Priya Bhavani Shankar | GV  Prakash | Drumsticks - YouTube

ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டு, விக்ரம் சுழலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க ஜம்ப் அடித்து ஜூலை 1ம் தேதி ரிலீஸை அறிவித்தார்கள். அதன்படி இன்று யானை திரைப்படம் வெளியாகவுள்ளது. 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி, கேஜிஎஃப் கருடன் புகழ் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யானை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.  இசை ஜி வி பிரகாஷ்குமார். 

யானை படம் எப்படி இருக்கு? விமர்சனத்தைப் படியுங்கள்....!

அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும் ஹரி இயக்கம் என்பதாலும் இயல்பாகவே இந்த படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும் வழக்கம்போல இந்த படத்துக்கு போட்டியாக இரண்டு பெரிய படங்கள் வெளிவந்துள்ளன. 

ராக்கெட்ரி - நம்பி விளைவு

Rocketry | ENGLISH Trailer | R. Madhavan, Simran Bagga - YouTube

மிகவும் எதிர்பார்க்குரிய படமாக மாதவன் எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படமான ராக்கெட்ரி இன்று வெளியாகியுள்ளது. இதில் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.  மாதவனுக்கு ஜோடியாக நம்பி நாராயணன் மனைவி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். யானை படத்துக்கு மிகவும் போட்டியாக இந்த படம் பார்க்கப்படுகிறது. 

ராக்கெட்ரி - நம்பி விளைவு படம் எப்படி இருக்கு? விமர்சனத்தைப் படியுங்கள்....!

ஹிந்தி, தெலுங்கு பதிப்பில் ஷாருக்கானும், தமிழில் சூர்யாவும் கேமியோ ரோலில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


டி பிளாக்

D BLOCK (2021) Tamil Movie Teaser | Arul Nithi - YouTube

பிரபல யூடியூப் சேனல் எருமசாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படமான டி பிளாக் இன்று வெளியாகியுள்ளது. அருள்நிதி ஜோடியாக அவந்திகா நடித்துள்ளார். 

டி பிளாக் படம் எப்படி இருக்கு? விமர்சனத்தைப் படியுங்கள்....!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களையும் பார்க்கலாம்

விரட்ட பருவம் 

Virata Parvam Trailer: It's The Story Of Vennala's True Love Towards  Comrade Ravanna

சாய்பல்லவி, ராணா, பிரியாமணி, ஈஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விரட்ட பருவம் . கடந்த ஜூன் 17ம் தேதி வெளியாகி சில நாட்கள் பேசப்பட்டாலும், பெரிய அளவில் திரையரங்குகளில் கொண்டாடப்படவில்லை. தெலுங்கு மாநிலங்களிலும் விக்ரம் படம் நல்ல ஓட்டத்தைப் பெற்றுள்ளது இந்த படத்துக்கு பாதகமாக அமைந்தது. ஆனால் படத்தின் காண்டென்ட் நிச்சயம் பலரை ஈர்க்கும். இன்று நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தையும் காணுங்கள் 

சாம்ராட் ப்ரித்விராஜ்

Samrat Prithviraj: Why did a Bollywood film on a popular Hindu king fail? -  BBC News

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது அக்ஷய் குமாரின் டிசாஸ்டர் திரைப்படமான ப்ரித்விராஜ். 

கீடம்

Keedam - Official Trailer | Rahul Riji Nair | Rajisha Vijayan | Sreenivasan  - YouTube

மலையாள திரைப்படமான கீடம் ஜீ5 ஆப்பில் வெளியாகியுள்ளது.  விஜய் பாபு, ரெஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாகத்

Kangana Ranaut | Dhaakad Movie: Dhaakad' sells 20 tickets on Day 8,  netizens come up with Kangana Ranaut-memes

மற்றொரு டிசாஸ்டரான தாகத் திரைப்படம் கங்கணா ரணாவத் நடித்தது. ஜீ 5 ஆப்பில் வெளியாகியுள்ளது. 

குங் ஃபூ பாண்டா

Kung Fu Panda: The Paws of Destiny (TV Series 2018–2019) - IMDb

Kung Fu Panda: The Paws of Destiny (Season 2) இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. கார்ட்டூன் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்படியாக உருவாகியுள்ளது இந்த வெப் சீரிஸ். 

Rebelde (Season 2)

Rebelde Season 2 :Release Date Confirmed On Netflix 2022 ? Latest Updates

நெட்பிளிக்ஸில் அதிகம் பேசப்பட்ட வெப்சீரிஸான இது மெக்ஸிகன் திரைப்படமாகும். இது எலைட் எனும் ஸ்பானிஷ் சீரிஸின் தழுவல்.  இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிறது.

Stranger Things (Season 4, Volume 2)

Betting On Stranger Things Season 4

நெட்பிளிக்ஸில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து Stranger Things வெப்சீரிஸின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்