Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்.. வைரல்!

Nandhinipriya Ganeshan Updated:
தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்.. வைரல்!Representative Image.

தனுஷ் நடித்து முதன் முதலில் ஹிந்தியில் வெளியான படம் ராஞ்சனா. இது தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க, இரண்டாவது நாயகியாக ஸ்வரா பாஸ்கர் என்பவர் நடித்திருந்தார். ஸ்வரா பாஸ்கர் பாலிவுட் திரையுலகத்தில் ரொம்ப ஃபேமஸ். 

ஏனென்றால், மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதை தாண்டி, தன்னை பற்றிய வதந்திகளுக்கும் விமர்சனங்களுக்கு மிகவும் போல்டாக பதிலடி கொடுப்பவர். குறிப்பாக சில முறை மோடி அரசுக்கு எதிராக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் கருத்துக்களை குறி,  பல முறை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார்.

தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்.. வைரல்!Representative Image

இவர் நீண்ட காலமாக காதலித்து வந்த பகத் அகமத் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்துக்கொண்டார்.  பின்னர், ஒரு மாதம் கழித்து மும்பையில் வரவேற்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்தினர். 

இந்நிலையில் தற்போது ஸ்வரா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் போட்டோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். பேபி பப்புடன் கணவர் அரவணைப்பில் இருப்பது போன்ற அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்