Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்கள்தான் சிறந்த அப்பா.. ப்ரியா பதிவிட்டிருக்கும் எமோஷனல் போஸ்ட்

Aruvi Updated:
நீங்கள்தான் சிறந்த அப்பா.. ப்ரியா பதிவிட்டிருக்கும் எமோஷனல் போஸ்ட்Representative Image.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மணிரத்னத்தின் மௌனராகம் போல் இருந்ததாக கூறப்பட்டாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

ராஜா ராணியை தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார் அட்லீ.. படம் சூப்பர் ஹிட்டானாலும் பல காட்சிகளும் ஏன் படமே சத்ரியன் படத்தின் சொல்லப்படாத  ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. மெர்சல் மெகா ஹிட்டானது.

தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முன்னதாக ஜூன் மாதமே படம் ரிலீஸாக வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.

நீங்கள்தான் சிறந்த அப்பா.. ப்ரியா பதிவிட்டிருக்கும் எமோஷனல் போஸ்ட்Representative Image

உலகின் சிறந்த தந்தை

இப்படிப்பட்ட சூழலில் அட்லீ மும்பையில் 38 கோடி ரூபாய்க்கு சொகுசு ஃப்ளாட் வாங்கியிருப்பதாகவும், அதற்கான இண்டிரீயர் டிசைனை ஷாருக்கானின் மனைவி கௌரிதான் கவனித்துக்கொள்கிறார் எனவும் சமீபத்தில் ஒரு பேச்சு எழுந்தது.  இதனையடுத்து, ஜவான் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அட்லீ அடுத்தடுத்து ஹிந்தி படங்களை இயக்கும் ஆசையில் இருக்கிறார்.அதனால்தான் மும்பையில் வீடு வாங்கியிருக்கிறார் என கூறப்பட்டது. இதற்கிடையே அட்லீக்கும், ப்ரியாவுக்கும் அண்மையில் மகன் பிறந்தார். அவருக்கு மீர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே அட்லீயின் மனைவியும், நடிகையுமான  ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் வாழ்த்தில், “தந்தையர் தின வாழ்த்துகள் டாடா.. மீர், பெக்கி மற்றும் அம்மா உங்களை அதிகம் நேசிக்கின்றோம். நீங்கள் இந்த உலகத்திலேயே சிறந்த அப்பா” என குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்