Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீடு..! வைரலாகும் வீடியோ

Gowthami Subramani Updated:
பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீடு..! வைரலாகும் வீடியோRepresentative Image.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனின் டிரெய்லர் ஆனது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வித்தியாசமான வேடத்தில் பிரபாஸ் அவர்களின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். முன்னரே, இவர் நடித்து வெளியான திரைப்படமான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இந்த திரைப்படமானது ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புராண நாடகம் ஆகும். அதன் படி, இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். மேலும் லட்சுமணனாக சன்னி சிங் நடித்துள்ளார். மேலும், இதில் சைஃப் அலிகான் அவர்கள் ராவணன் வேடத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமானது வரும் ஜூன் 16 ஆம் தேதி பல்வேறு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது.

இந்த திரைப்படமானது, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விமர்சனங்களால், படம் முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஸ்ரீராமனின் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாக உள்ளது. ஸ்ரீராமர் மற்றும் ராமாயணத்தின் கதையைக் கூறுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்