Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேப்டன் மில்லர் ஷூட்டிங்கை முடித்தார் சூப்பர் ஸ்டார்!

Aruvi Updated:
கேப்டன் மில்லர் ஷூட்டிங்கை முடித்தார் சூப்பர் ஸ்டார்!Representative Image.

சென்னை: கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் தனது போர்ஷனை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த இடங்களுக்கு அவர் சென்றுவிட்டார். இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முக்கியமாக இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று தனுஷ்  பெயரும் பெற்றிருக்கிறார்.

தனுஷ் சமீபத்தில் நடித்து வெளியான படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருந்தது.  இதன் மூலம் இத்தனை வருடங்கள் தெலுங்கில் அறிமுகமாகாமல் இருந்த தனுஷ் தற்போது டோலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். இருப்பினும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.

வாத்தி படத்துக்கு பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.  பீரியட் படமாக இந்தப் படம் உருவாகும் என கூறப்பட்டிருப்பதால் இந்தப் படத்தின் மீது தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். 

அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் கவனம் ஈர்த்த அருண் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபிப்பார் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து அப்படத்துக்கு சிக்கல் எழுந்துவருகிறது. இருப்பினும் அவைகளை எல்லாம் தாண்டி படம் வேகமாக வளர்ந்துவருகிறது இப்போது மதுரையில் நடந்துவரும் ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மதுரையில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. 

படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். அவரைத் தவிர்த்து சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் சிவராஜ்குமார் கேப்டன் மில்லரின் ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சமீபத்தில் த்அகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்