Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடனமும் நடிப்பும் இப்ப பாடலும்... ஃபுல் பேக்ட்டு நடிகையான ஷங்கரின் மகள்!

UDHAYAKUMAR August 03, 2022 & 13:24 [IST]
நடனமும் நடிப்பும் இப்ப பாடலும்... ஃபுல் பேக்ட்டு நடிகையான ஷங்கரின் மகள்!Representative Image.

நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய ரவுண்டு வருவார் என கோலிவுட் வட்டாரமே பேசி வருகிறது. காரணம் அவரின் ஒத்துழைப்புதான். ஷூட்டிங்கில் தான் பெரிய இயக்குநரின் மகள் என எந்த ஆணவமும் இல்லாமல் தரைமட்ட அளவில் இறங்கி வேலை செய்திருக்கிறாராம் அதிதி. இதனை விருமன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தொழிலாளர்களே கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிப்பு, நடனம், பாட்டு என அனைத்திலும் பேசப்படுவார் என்கிறார்கள். 

அதிதி ஷங்கர், கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகமாகிறார். அவரின் நடனம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக காத்திருந்தனர். பாடலின் லிரிக் வீடியோக்கள் மட்டுமே இப்போது வரை வெளியாகியிருப்பதால், படம் வெளியாகும் வரை இதற்கான விடை வெளியில் தெரியாது. ஆனால் படத்தில் பணிபுரிந்தவர்கள் அதிதியின் நடனம் மட்டுமின்றி குரலையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அதிதி தனது குரலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து மதுர வீரன் டூயட் பாடலைப் பாடி அசத்தியுள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்