Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விருமன் ஆடியோ லாஞ்ச் ஒரு பக்கம் ஷூட்டிங் இன்னொரு பக்கம்! தீயாய் வேலை செய்யும் படக்குழு

UDHAYAKUMAR [IST]
விருமன் ஆடியோ லாஞ்ச் ஒரு பக்கம் ஷூட்டிங் இன்னொரு பக்கம்! தீயாய் வேலை செய்யும் படக்குழுRepresentative Image.

மதுரையில் ஒரு பக்கம் இசை வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்தாலும், மறுபக்கம் ஷூட்டிங்கையும் நடத்தி முடிக்க மும்முரமாக வேலை பார்த்து வருகிறது விருமன் படக்குழு. கடைசி நாள் ஷூட்டிங் இன்று நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவரும் மதுரையில் இருக்கும்போது சென்னையில் எப்படி ஷூட்டிங் நடக்கும் என்பது மட்டும் பிடிபடவில்லை. 

மதுரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுடன் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியும் ஒருசேர நடக்கும் என கூறப்படுகிறது. BMS உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் ஆப் மூலம் மிக விரைவாக டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சூர்யாவும் கலந்துகொள்வார் என தெரிகிறது. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அதிதி, பாடகியாகவும் தனது திறமையைக் காட்டியுள்ளார். குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ள விருமன் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்