Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார்த்தியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன்! டாப் கியரில் பயணிக்கப்போகும் நடிகை!

UDHAYAKUMAR August 03, 2022 & 12:21 [IST]
கார்த்தியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன்! டாப் கியரில் பயணிக்கப்போகும் நடிகை!Representative Image.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தனது தந்தை படத்தில் நடிப்பாரா என்றெல்லாம்கூட கேள்வி எழுந்திருந்த நிலையில், அடுத்தது உடனே ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அதிதி ஷங்கர். சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் வேறு லெவலுக்கு கோலிவுட்டில் கொடிகட்டி பறப்பார்கள். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா அருள் மோகன் எனும் அந்த பட்டியலில் அதிதியும் இணைவாரா என்பது விருமன் படத்தில் அவரின் நடிப்பைப் பொறுத்தே தெரியவரும். இன்று இன்னும் சில அப்டேட்கள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்