Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோகேஷுக்கு பிறகு லவ் டுடே பிரதீப்... தளபதியின் தாறுமாறு கணக்கு...!

UDHAYA KUMAR Updated:
லோகேஷுக்கு பிறகு லவ் டுடே பிரதீப்... தளபதியின் தாறுமாறு கணக்கு...!Representative Image.

AGS நிறுவனம் தயாரிப்பில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி  தாறுமாறு ஹிட்டடித்த படம் லவ் டுடே. முதல் படத்தை ஜெயம் ரவி கொண்டு இயக்கியவர், இந்த படத்தில் தானே ஹீரோவாக அறிமுகமானார். முதலில் இந்த படத்தை யார் பார்க்கப் போகிறார் என நினைத்தவர்களே வாயடைத்து போகும் அளவுக்கு கதையும், பிரதீப்பின் நடிப்பும் இருந்தது கோலிவுட், டோலிவுட் தாண்டி இப்போது பாலிவுட் வரை பேசப்பட்டு வருகிறது. இந்தியில் லவ் டுடே படத்தை ரீமேக் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி. 

இன்னொரு பக்கம் வாரிசு படத்தில் நடித்து முடித்துக் கொண்டு தளபதி 67 படத்துக்காக லோகேஷ் அணியில் இணைந்துள்ளார் தளபதி விஜய். அடுத்த படத்தை லோகேஷ் தான் இயக்குகிறார் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய், லவ் டுடே இயக்குநர், நடிகர் பிரதீப்பிடம் கதை கேட்டிருப்பதாகவும் அந்த கதையில் நடிக்க கிட்டத்தட்ட சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பிரதீப் மீதுள்ள நம்பிக்கையால் மேலும் காத்திருக்காமல் நேரடியாகவே வாய்ப்பு வழங்க தளபதி விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 67 படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறாராம் விஜய். ஏற்கனவே லவ் டுடே படம் ஹிட் ஆன உடன் பிரதீப்பிடம் அடுத்த படமும் நமக்குதான் என ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். விஜய்க்கும் பிரதீப் மீது நம்பிக்கை வந்துள்ளதால் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல். 

ஆனால் தளபதி 67 போல வெளியில் கசிய விடக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடாமல், வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தளபதி 67 உடனடியாக முடிந்தால், அடுத்து பிரதீப்புடன் தளபதி 68ல் இணையலாம்,  அல்லது அதற்குள் வேறு ஏதும் சின்ன படம் செய்யமுடிந்தால் பிரதீப் முடித்துவிட்டு வரட்டும் தளபதி 69 நாம பண்ணிக்கலாம் என்றிருக்கிறாராம் விஜய். 

இத்தனை விசயங்கள் நடந்தும் வெளிப்படையாக யாரிடமும் கூறாமல் இருக்கிறார் பிரதீப். தம்பி நீங்க பொழச்சுக்குவீங்க. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்