Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த ஜென்மத்துல மீண்டும் அரசியலுக்கு வரேன்.. ரஜினி அறிவிப்பு!

UDHAYA KUMAR Updated:
அடுத்த ஜென்மத்துல மீண்டும் அரசியலுக்கு வரேன்.. ரஜினி அறிவிப்பு!Representative Image.

பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ரஜினி அரசியலுக்கு வருவார் என கூறுவாரா என்பது போல ஒரு காட்சி வரும். அது ரீ-ரிலீஸில் எப்படி வரப்போகிறது என ரசிகர்கள் காத்திருந்தார்கள். 

பாபா திரைப்படம் ரஜினிகாந்த் திரை வரலாற்றில் முக்கியமான படமாகும். காரணம் அவர் தனது சொந்த பணத்தை போட்டு தயாரித்த படம். முதலில் வெளியான போது பயங்கரமான தோல்வியைப் பெற்று நஷ்டமடைந்தது. இதனால் மீண்டும் படத்தை தூசு தட்டி ஏமாந்தவர்களிடம் கல்லா கட்டலாம் என நினைத்துள்ளது படக்குழு. 

பாபாவை ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு லாபம் பார்க்கலாம் என நினைத்தது. ரசிகர்கள் அனைவரையும் தயார் செய்து மீண்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என திட்டமிட்டனர். படமும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அரசியலுக்கு வருவது பற்றிய டயலாக், கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதில்தான் டிவிஸ்ட் வைத்துள்ளனர். 

நான் அரசியலுக்கு வருவது உறுதி ஆனா ... அடுத்த ஜென்மத்தில் மீண்டும் பிறந்து அம்மாவோட ஆசைகள நிறைவேற்றுனு பாபாவே உத்தரவிட்டுட்டார்னு படத்தை முடித்திருக்கிறார்கள். என்னது திரும்பவும் முதல்ல இருந்தா என ரசிகர்கள் தியேட்டரை விட்டு ஓடாத குறைதான். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்