துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜித் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை கிளப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அஜித் நடித்து வெளிவரவுள்ள ‘துணிவு’ படம் வெற்றி பெற வேண்டி பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்
.
நடிகர் அஜித் நடித்துள்ள படம் துணிவு, இப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ள நிலையில், சூப்பர் டூப்பர் வெற்றி பெற வேண்டி மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகிலுள்ள பரவை கிராமத்தைச் சேர்ந்த தேசிய நாயகன் அஜித் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர்.
பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பாதயாத்திரையாக கிளம்பினர். கையில் துணிவு வெற்றி பெற வேண்டி பழனி முருகனை நோக்கி பாதயாத்திரை, ‘துணிவு வருக வெல்க’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை ஏந்தியவாறு பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…