Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ajith kumar 62 shooting start date எப்ப துவங்குது தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
ajith kumar 62 shooting start date எப்ப துவங்குது தெரியுமா?Representative Image.

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் எங்கே நடக்கப் போகிறது, எப்போது துவங்கவிருக்கிறது உட்பட AK 62 படத்தின் சில அப்டேட்கள் வெளியாகியிருக்கின்றன.

அஜித்குமார் தற்போது  ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 2023ம் தேதி வெளியாக காத்திருக்கிறது.   தீரன், சதுரங்க வேட்டை ஸ்டைலில் பெரிய சம்பவம் செய்ய ஹெச் வினோத் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் அடுத்த படத்துக்கு செல்வார் என கூறப்பட்டது. 

இந்நிலையில், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இன்னும் 25 நாட்களில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கப்போவதாகவும் தெரிகிறது.  லோகேஷன் எல்லாம் பார்த்துவிட்டு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லைகா தரப்பிடமிருந்து அழைப்பு வந்துள்ள நிலையில், விக்னேஷ் சிவன் லண்டனுக்கு பயணப்படுகிறார் என சிலர் தகவல் தெரிவித்துள்ள நிலையில், லண்டனிலிருந்து திரும்பியதும் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். 

அஜித் 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகான நாட்களில் துவங்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் துவங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், மும்பையில் இந்த முதற்கட்ட படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் வெளிவந்த தகவலில், கூடுதலாக அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடக்கலாம் என்கிற தகவலும் இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்