Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' - தளபதி விஜய் சொந்த குரலில் பாடிய பாடல்கள்.. | Voice of Vijay Songs

Nandhinipriya Ganeshan Updated:
'இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்' - தளபதி விஜய் சொந்த குரலில் பாடிய பாடல்கள்.. | Voice of Vijay Songs Representative Image.

இவரெல்லாம் எங்க நடிகராக போறாரு என்று கேலி செய்தவர்களுக்கு மத்தியில், தென்னிந்திய சினிமாவின் டாப் மற்றும் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நம்ம தளபதி விஜய். இவருடைய ஒரிஜினல் பெயர் ஜோசப் விஜய் என்று நமக்கு தெரியும். என்ன தான் இயக்குனரின் மகன் என்றாலும், அவமானமும் தோல்வியும் இவருக்கும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தன்னுடைய விடாமுயற்சியால் பல கோடி நெஞ்சங்களின் ஆசை நாயகனாக தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கிறார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்தார். ஆனால், கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளிவந்த நாளை தீர்ப்பு திரைப்படத்தில் தான்.

ஆரம்பத்தில் தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்திலும் விமர்சிக்கப்பட்டார். ஆனால், தற்போது இவரை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர். நடிப்பு, நடனம், திறமை ஒருபுறம் இருந்தாலும், இவருடைய குரலுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ் நடிகர்களில் மிகவும் திறமையான பாடகர்களில் இவரும் ஒருவர். 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில், "பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி" என்ற பாடலை பாடியதன் மூலம் பாடகராக அறிமுகமானார். அதையடுத்து இவர் பாடிய அனைத்து பாடல்களுமே மாஸ் ஹிட். அதன்பிறகு, சச்சின் (2005) படத்தில் தனது 25வது பாடலான "வாடி வாடி" பாடலுக்குப் பிறகு, விஜய் நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக பாடுவதில் இருந்து தள்ளியிருந்தார். ஆனால், மீண்டும் துப்பாக்கியில் (2012) "கூகுள் கூகுள்" பாடல் மூலம் மீண்டும் பாடத் தொடங்கினார். 

கத்தி (2015) படத்தில் இவர் பாடிய "செல்ஃபி புள்ள" பாப் பாடல் ருமேனியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. "செல்ஃபி புள்ள" பாடலின் மூலம் சிறந்த பின்னணி பாடகர் பிரிவில் தென்னக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன்பிறகு, 2015 ஆம் ஆண்டு, "ஏண்டி ஏண்டி" பாடலுக்காக அவர் மீண்டும் சிறந்த பின்னணிப் பாடகருக்காக பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக, வாரிசு படத்தில் "ரஞ்சிதமே" பாடலில் இவருடைய குரல் மற்றும் நடனம் இரண்டுமே மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தளபதி விஜய் பாடிய இதுவரை பாடல்களின் பட்டியலை பார்ப்போம்.

விஜய் பாடிய பாடல்கள்:

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி – ரசிகன் – (தேவா)
2. ஒரு கடிதம் எழுதினேன் – தேவா – (தேவா)
3. அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு – தேவா – (தேவா)
4. கோத்தகிரி குப்பம்மா – தேவா – (தேவா)
5. தொட்டபெட்டா ரோட்டு மேல – விஷ்ணு – (தேவா)
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி – கோயம்புத்தூர் மாப்பிள்ளை – (வித்யாசாகர்)
7. திருப்பதி போனா மொட்டை – மாண்புமிகு மாணவன் – (சபேஷ் முரளி)
8. சிக்கன் கறி – செல்வா – (சிற்பி)
9. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் – காலமெல்லாம் காத்திருப்பேன் – (தேவா)
10. ஊர்மிளா ஊர்மிளா – ஒன்ஸ்மோர் – (தேவா)
11. ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை – (இளையராஜா)
12. மெளரியா மெளரியா – பிரியமுடன் – (தேவா)
13. காலத்துக்கேத்த ஒரு கானா – வேலை – (யுவன் சங்கர் ராஜா)
14. நிலவே… நிலவே…. – நிலாவே வா – (வித்யாசாகர்)
15. சந்திரமண்டலத்தை – நிலாவே வா – (வித்யாசாகர்)
16. நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து – பெரியண்ணா – (பரணி)
17. ஜூட்டடி லைலா – பெரியண்னா – (பரணி)
18. ரோட்டுல ஒரு – பெரியண்னா – (பரணி)
19. தங்கநிறத்துக்கு – நெஞ்சினிலே – (தேவா)
20. மிசிசிப்பிநதி குலுங்க – பிரியமானவளே – (எஸ்.ஏ.ராஜ்குமார்)
21. என்னோட லைலா – பத்ரி – (ரமணகோகுலா)
22. உள்ளத்தைக் கிள்ளாதே – தமிழன் – (இமான்)
23. கொக்கோ கோலா – பகவதி – (தேவா)
24. வாடி வாடி வாடி – சச்சின் – (தேவி ஸ்ரீபிரசாத்)
25. கூகுள் கூகுள் – துப்பாக்கி – (ஹாரிஸ் ஜெயராஜ்)
26. வாங்கண்ணா வணக்கங்கண்னா – தலைவா – (ஜி.வி.பிரகாஷ்)
27. செல்ஃபி புள்ள – கத்தி – (அனிருத்)
28. கண்டாங்கி கண்டாங்கி – ஜில்லா - (டி.இமான்)
29. ஏண்டி ஏண்டி – புலி – (தேவி ஸ்ரீபிரசாத்)
30. செல்லக்குட்டி – தெறி – (ஜி.வி.பிரகாஷ்)
31. அப்பா அப்பா – பைரவா – (சந்தோஷ் நாராயணன்)
32. வெறித்தனம் – பிகில் – (ஏஆர் ரஹ்மான்)
33. குட்டி ஸ்டோரி – மாஸ்டர் – (அனிருத் ரவிச்சந்தர்)
34. ஜாலி ஓ ஜிம்கானா – பீஸ்ட் – (அனிருத் ரவிச்சந்தர்)
35. ரஞ்சிதமே – வாரிசு – (தமன் எஸ்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்