Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் தவறவிட்ட படங்களின் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே! எல்லாத்துலயும் நடிச்சி பெரிய ஆளான சூர்யா!

UDHAYA KUMAR May 25, 2022 & 15:48 [IST]
அஜித் தவறவிட்ட படங்களின் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே! எல்லாத்துலயும் நடிச்சி பெரிய ஆளான சூர்யா!Representative Image.

ஒருவருக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டால், அந்த வாய்ப்பை இன்னொருவர் சரியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்வார் என்பது சூர்யா, அஜித் விசயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. அஜித் தவற விட்ட பெரும்பான்மை படங்களில் சூர்யா நடித்து, அது அனைத்துமே மாஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித். அவரைப் போலவே முன்னணி நடிகராக சூர்யா பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்தது. அஜித் நடிப்பில் வலிமை படம் திரையரங்குகளில் ரசிகர்கள் செல்வாக்கோடு சராசரி வெற்றியை ருசித்தது. தற்போது சூர்யா பாலா இயக்கத்திலும், அஜித் ஹெச் வினோத் இயக்கத்திலும் தங்களது அடுத்த படத்தில் நடித்து வருகின்றனர். 

அஜித் சினிமா துறையில் சூர்யாவுக்கு சில ஆண்டு காலம் சீனியர். அவரின் சினிமா வாழ்க்கையில் பல வருடங்கள் தோல்விகளாலேயே முடிந்தது. ஆனாலும் விடா முயற்சியுடன் போராடி வருகிறார் அஜித். இவர் நடிக்கவேண்டிய பல திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போகவே, அவருக்கு பதில் சூர்யா நடித்து அந்த படங்கள் வெளியாகின. பின்னர் அந்த படங்கள் மாபெரும் ஹிட்டும் ஆகின. இப்படி ஹிட் ஆன படங்களின் லிஸ்ட் பெருசு. 

முதலில் நேர்க்கு நேர் படத்தில் நடிக்கவேண்டியது அஜித்தான். ஆனால் அவருக்கு ஏற்பட்ட குழப்பத்தால், பாதியிலேயே விலக அதில் அறிமுகமானார் சூர்யா. அந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருப்பார்.

பாலா இயக்கத்தில் நந்தா படமும் முதலில் அஜித்தை வைத்தே எடுப்பதாக இருந்தது. ஆனால் பாலாவிடம் மோதல் போக்கு காரணமாக அந்த படமும் கைவிடப்பட்டு பின் சூர்யாவை வைத்து எடுத்து முடிக்கப்பட்டதாம்.  

கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படமும் முதலில் அஜித்துக்காக எழுதப்பட்டதாம். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் இந்த படத்துக்குள் சூரியா வந்தாராம். தீனா படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸும் கஜினி படத்தில் அஜித்தை நடிக்க வைக்கவே முதலில் காய் நகர்த்தினாராம்.  ஆனால் அஜித்துக்கு விருப்பம் இல்லாததால், இந்த படத்தில் சூர்யா நடித்து முடித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 

இப்படி பல படங்களை கை நழுவ விட்டலும், இப்போது தனக்கான இடத்துக்காக போராடாமல் தனக்கென தனி இடம் ஒன்றை தானே உருவாக்கி அதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் அஜித். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்