Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனிருத்துக்கு திருமணம் பொண்ணு அவரும் இல்லை இவரும் இல்லையாம்! அப்ப யாரு?

UDHAYA KUMAR May 25, 2022 & 15:26 [IST]
அனிருத்துக்கு திருமணம் பொண்ணு அவரும் இல்லை இவரும் இல்லையாம்! அப்ப யாரு?Representative Image.


இசையமைப்பாளர் அனிருத்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தை திருமணம் செய்யப்போவது அவருடன் பேசப்பட்ட அந்த நடிகையும் இல்லையாம். இந்த பாடகியும் இல்லையாம். இதனால் அனிருத் ரசிகர்கள் உட்பட பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். அப்படியென்றால் யார்தான் அனிருத்தை திருமணம் செய்யப்போகிறார் என்பவர்களுக்காகத் தான் இந்த செய்தி

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர். ரஜினியின் மருமகன் முறைதான் அனிருத். தனுஷ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், படிப்படியே முன்னேறி அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இந்திய அளவில் புகழ் பெறத் தொடங்கினார். பின்னர் தனது அசராத பாடல்கள் மூலம், உலக அளவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருகிறார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். வருகிற ஜூன் 3ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது. 

இந்நிலையில், அனிருத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என்கிற தகவல் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அவருக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்பதுதான் ரசிகர்களின் ஆர்வத்துக்கு காரணம். 

அனிருத் தனது ஆரம்ப காலத்தில் ஆண்ட்ரியாவுடன் சேர்த்து பேசப்பட்டார். இருவருக்கும் நிறைய வயது வித்தியாசம் என்றாலும் கோலிவுட்டில் பேச்சு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அனிருத் தனது வாழ்க்கைப் பாதையை நோக்கி நடைபோட்டார். பின்னர் கீர்த்தி சுரேஷுடன் சேர்த்து வைத்து பேசினார்கள். இவர்களும் அதற்கு ஏற்றார்போல ஒரே ஹோட்டலில் தங்குவது, ஒன்றாக ஊர் சுற்றுவது என பொழுதை கழித்தனர். இதனால் விரைவில் அனிருத், கீர்த்தியை திருமணம் செய்வார் என பேசப்பட்டது. 

பின்னர் ஜோனிட்டா காந்தியுடன் ஒன்றாக ஊர் சுற்றியதாக தகவல் வெளியானது. இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வதாகவும், இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் தகவல் பரவ, அது குறித்து கேட்டும் கேட்காததுபோல இருந்தனர். இதனால் மட்டுமின்றி தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து ஜோனிட்டா காந்தியை பயன்படுத்தி பாடலை இயற்றி வந்தார் அனிருத். இதனால் அவர்கள் இருவருக்கும் காதல் என பேசப்பட்டது. இப்படி கீர்த்தி சுரேஷ், ஜோனிட்டா காந்தி என இருவருடனும் நெருக்கமாக பழகி வந்ததால், காத்து வாக்குல ரெண்டு காதல் செய்றாரோ என சிலர் பேச நேர்ந்தது. ஆனாலும் சினிமா வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இந்நிலையில், அனிருத்துக்கு திருமணம் என்கிற செய்தி வந்துள்ளது.  ஒருவேளை காதல் உண்மைதானோ. காதலித்தவரையே கரம்பிடிக்கிறாரோ என பேசப்பட, இப்போது இருவருமே மணப்பெண் இல்லியாம். வேறொருவர்தான் அனிருத்தை திருமணம் செய்யவிருக்கிறாராம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அனிருத் திருமணம் செய்யவுள்ள பெண், ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனரின் மகள் எனக் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் அனிருத்தை கொத்திக் கொண்டு போகும் அந்த பெண் யாரென்று. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்