Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கிளைமேக்ஸால் தோற்றுப் போன அஜித் படம்! புலம்பும் தயாரிப்பாளர்...!

UDHAYA KUMAR September 20, 2022 & 16:17 [IST]
கிளைமேக்ஸால் தோற்றுப் போன அஜித் படம்! புலம்பும் தயாரிப்பாளர்...!Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவர் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

அஜித் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கிய படம் கிரீடம். இந்த படத்தைத் தயாரித்திருந்தவர் அவரின் தந்தை ஏ எல் அழகப்பன். படத்தை மலையாளத்திலிருந்து ரீமேக் செய்திருந்தனர். 

அஜித் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோவாக இருந்ததால் கிளைமேக்ஸ் கொஞ்சம் மாற்றலாம் என கூறியிருக்கிறார் அழகப்பன். ஆனால் அவரின் மகனே இயக்குநர் என்பதால், இந்த படத்தை அப்படியேத்தான் ரீமேக் செய்வேன் என கூறியுள்ளார். 

மகனின் பேச்சைக் கேட்கலாம் என நினைத்ததால், அழகப்பன் அப்படியே விட்டுவிட்டார். இயக்குநரும் படத்தின் கதையை மாற்றாமல் அப்படியே எடுத்து வெளியிட்டார். ஆனால் ரசிகர்களுக்கு படத்தின் கிளைமேக்ஸ் பிடிக்கவில்லை. இதனால் உடனடியாக மாற்றப்பட்டது கிளைமேக்ஸ். 

முதலிலேயே கிளைமேக்ஸை நான் சொன்னபடி எடுத்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என அழகப்பன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்