Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் படத்தை இயக்கினால் ஆக்ஷன் படம் தான் - சுதா கொங்கரா!

Nandhinipriya Ganeshan September 20, 2022 & 11:40 [IST]
விஜய் படத்தை இயக்கினால் ஆக்ஷன் படம் தான் - சுதா கொங்கரா!Representative Image.

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களின் இடங்களில் வென்றவர் சுதா கொங்கரா. கோபிநாத்தின் பயோ பிக்காக வெளியான சூரரைப்போற்று படம் சமீபத்தில் விருதுகளை அள்ளிக்குவித்தது. இதனால், படக்குழு கேக் வெட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், இந்த டீமிற்கு ஏராளமான வாழ்த்துக்களும் குவிந்தன. அதேபோல், குத்து சண்டையை மையமாக வைத்து இயக்கிய இறுதிச்சுற்று படமும் மாஸ் ஹிட் அடித்தது. 

தேசிய விருதுகளை அள்ளிய படம்

இந்நிலையில், தேசிய விருதை வென்ற சூரரைப் போற்று படத்தை இந்தியில் அக்ஷ்ய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யா தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் சுதா கொங்கரா.

சுதா கொங்கராவின் விருப்பம்

இதற்கிடையில், தேசிய விருது வென்றுள்ள இயக்குனர் சுதா கொங்கராவிடம் சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளனர். இதில், விஜய்யுடன் இணையும் வாய்ப்பு இருக்கின்றதா? அதை நாங்கள் எதிர்பார்க்கலாமா? என்று சுதா கொங்கராவிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

Thalapathy Vijay to make his Instagram debut soon | Tamil Movie News -  Times of India

மேலும் இதற்கு பதிலளித்த சுதா கொங்கரா, 'நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை என்றும், நான் கதை சொல்லி அது அவருக்கு பிடித்த கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக இந்த கூட்டணி அமையும்' என்றும் கூறியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்