Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ak 62 heroine இவராமே.... மீண்டும் இணையும் அஜித்தின் ஃபேவரைட்!

UDHAYA KUMAR Updated:
ak 62 heroine இவராமே.... மீண்டும் இணையும் அஜித்தின் ஃபேவரைட்!Representative Image.

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

அஜித்குமார் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் 2023க்கு வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் ஹெச் வினோத்,  தீரன், சதுரங்க வேட்டை ஸ்டைலில் பெரிய சம்பவம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாடல்கள் அனைத்தும் தெறி லெவலாக இருக்கும் எனவும் அதில் ஒரு பாடலுக்கு அஜித் வேற லெவலுக்கு இறங்கி ஆட்டம் போட்டுள்ளார் எனவும் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளன. 

இந்நிலையில், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க தளபதி 67 தயாராக காத்திருக்கிறது. இப்போது அஜித் ஜோடியாகவும் த்ரிஷாவே நடிக்க இருப்பதாக கூறப்படுவது 90ஸ் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

அஜித் - திரிஷா இருவரும் இணைந்து கிரீடம், ஜீ, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். அனைத்து படங்களுமே கண்டென்ட் அளவில் மிக வலிமையான படங்கள். அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் படம் என்பதால் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையும் தயாராக இருக்கிறது எனவும் படத்தை அடுத்த தீபாவளிக்குள் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்