Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!

UDHAYA KUMAR Updated:
விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image.

தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியாகின. வெற்றி தோல்விகளைத் தவிர்த்து இந்த திரைப்படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. அப்படி ஒரு கதாபாத்திரம் நம் வீட்டில் வந்துவிட மாட்டாரா? இப்படி ஒரு ஹீரோ நம்மை காக்க வந்திருக்கமாட்டாரா என இப்படி பல கதாநாயகர்களையும் தன் வாழ்க்கையும் பொறுத்திப் பார்க்கும் மனம் கொண்ட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் பட்டியல் இதோ
 
விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

10  முத்துவீரன்

நிகழ்காலத்தில் வாழும் ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், வேலைக்காக சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து பிறகு அந்த கேங்கிற்கே தலைவனாக மாறுவதுதான் முத்துவீரனின் வாழ்க்கை. கிட்டத்தட்ட நாயகன் படத்தை ஒத்த ஒரு கதை என்றாலும் இதில் வேலு கதாபாத்திரமும், முத்துவீரன் கதாபாத்திரமும் வேறு வேறு வகை. ஆனால் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்கள் எனும் சில ஒற்றுமைகளும் இருக்கிறது. 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

9 ரேம்போ

இந்த மாதிரி ஒருவன் நம் வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது என்றுதான் பல பெண்கள் நினைக்ககூடும் ஆனால் இது ஆண்களுக்கு அப்படியே நேர் மாறுதலாக இருக்கும். ரேம்போ உண்மையாக இருப்பவன். இரண்டு பேரைக் காதலித்தாலும் இருவருக்கும் உண்மையாக இருக்கிறான். எந்த நேரத்திலும் இருவரையும் விட்டுக் கொடுக்கவில்லை எனும் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்துப் போனது.

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

8 மதி

மிகுந்த அறிவுநுட்பம் கொண்ட ஒரு கதாபாத்திரம், நுண்ணிய விசயங்களையும் தெளிவாக திட்டமிடும் சூப்பரான கதாபாத்திரம் இது. எதிரிகளைத் துவம்சம் செய்வதாகட்டும், தனது சகோதரனைக் காக்க போராடுவதாகட்டும் இந்த படத்தில் விக்ரமைத் தாண்டி இந்த கதாபாத்திரத்தை நேசிக்க நமக்கு பல காரணங்கள் உண்டு. 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

7 வீரராகவன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் ஏற்று நடித்த கதாபாத்திரம் வீரராகவன். இவர் மிகச் சிறந்த ஏஜென்ட்டாக பணியாற்றியவர். பாகிஸ்தான் பார்டருக்கே சென்று அசால்ட்டாக திரும்பி வருபவர்.  மிகச்சிறந்த வீரர். இவருக்கு தெரியாத விசயங்களே கிடையாது. இப்படி ஒருவர் இருப்பது சாத்தியம் இல்லாத ஒரு விசயம்தான் என்றாலும் இருந்தால் நன்றாக இருக்கும். 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

6 சர்தார்

சர்தார் கதாபாத்திரம் நிச்சயம் நம்மில் ஒருவர்தான். தியாகங்கள் பல செய்தும், துரோகி என பெயர் எடுத்துமே தன் நாட்டுக்காக கடைசி வரைக்கும் போராடும் நபர். இந்தியனுக்கு சாவே இல்லை என்பது போல சர்தாருக்கும் சாவில்லை. நாட்டுக்காக உழைக்கும் ஏஜெண்ட்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பாத்திரமாக இதை நாம் பார்க்கலாம். 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

5 வந்தியத் தேவன்

மணிரத்னம் இயக்கத்தில் சோழர் வரலாற்றில் கற்பனைக் காட்சிகளை கண்முன் நிறுத்திய படம். கதை கற்பனைதான் என்றாலும் வந்தியத்தேவன் என்பவர் இப்படித்தான் இருப்பாரோ என நமக்குள்ளே பதிந்துவிட்டது என்றே சொல்லலாம். புதினத்தில் சொல்லப்பட்ட கதாபாத்திரத்தை சற்றும் குறைத்துவிடாமல், அதை அப்படியே  சொல்லியிருக்கிறார்கள். 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

4 கண்ணபிரான்

பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் நாயகனான கண்ணபிரான் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. அவரின் துருதுருவென நடிப்பும், அநீதிக்கு எதிராக வெகுண்டெழும் முறையும் நிச்சயம் பலரை கொண்டாடச் செய்தது.  சூர்யாவின் சமீபகாலத்தில் வெளியான ஓரளவுக்கு டீசன்ட்டான வெற்றிப் படம் இது 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

3 விக்ரம் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரம் விக்ரம். ஆனால் இந்த கதாபாத்திரத்தை முதலில் வடிவமைத்தவர் கமல்ஹாசன்தான். 1986ம் ஆண்டே இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது என்றாலும் லோகேஷ் தன்னுடைய யுனிவர்ஸில் இணைத்துக் கொண்டார். வேகமும், விவேகமும் கொண்ட அதிரடி நாயகனாக கமல்ஹாசனை அறிமுகப்படுத்தினார் லோகேஷ் 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

2 திருச்சிற்றம்பலம்

நம்ம தெருவில், பக்கத்து வீட்டில் கூட இந்த மாதிரி ஒரு பையன் இருப்பானே.. அட நான்தாங்க அந்த பையன் என பலரும் தங்களை அந்த கதாபாத்திரத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்தது திருவின் கதாபாத்திரம். நட்பை காதலாக நினைப்பது, தன்னை காதலிக்கும் பெண் தன்னுடன் நீண்ட காலமாக நட்பாக பழகியும் அந்த காதலை புரிந்துகொள்ளாமல் இருப்பது, பார்த்தவுடன் ஒரு பெண்ணை காதலிப்பது என சாட்ஜாட் சராசரி 90ஸ் கிட் தான் நம்ம திரு. 

விக்ரம், வீரராகவன், அர்ஜூன், சக்ரவர்த்தி.... 2022ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்கள் யார்? யார்? பட்டியல் இதோ!Representative Image

1 பிரதீப் ரங்கநாதன்

லேட்டர் 90ஸ் கிட், ஏர்லி 2கே கிட் எனப்படும் அரிய வகை கதாபாத்திரம் என கேலியாக சொன்னாலும், இந்த கால காதல் எப்படி இருக்கு, நம்பிக்கை துளியும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும்படியாக இருக்கிறது என்பதை ஒரு இளைஞனாக கண்முன் நிறுத்தினார் பிரதீப். இந்த வருடத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் இதுதான் என பலரும் கூறியிருக்கிறார்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்