Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நியூயார்க், துபாயில் வேற லெவல் பிளான்... அப்ப இது விளம்பரம் இல்லியா?

UDHAYA KUMAR Updated:
நியூயார்க், துபாயில் வேற லெவல் பிளான்... அப்ப இது விளம்பரம் இல்லியா? Representative Image.

ஒரு நல்ல படம் அதற்கான விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல், நியூயார்க், துபாய் என மிகப் பிரம்மாண்டமாக விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 

துபாயில் உள்ள பாம் தீவுகளில் ஸ்கை டைவிங் வகையில் விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறது துணிவு படக்குழு. துணிவு படத்தின் தயாரிப்பு தரப்பும், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் தரப்பும் போட்டி போட்டு விளம்பரப்படுத்தி வருகின்றனர். 

இதையடுத்து, துபாயிலுள்ள புர்ஜ் கலீஃபாவில் 3 நிமிடங்களுக்கு துணிவு விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். அதுவும் டிசம்பர் 31, நள்ளிரவு 11.59 மணிக்கு இதனை வெளியிட கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்திருக்கிறார்களாம். 

இதேபோல, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் வரை இந்த டிரைலர் இருக்கிறதாம். இதற்கும் லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்