Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thala Vs Thalapathi மோதல் ஸ்டார்ட்... பாட்டில் மோதிக்கொள்ளும் அஜித் Vs விஜய்

UDHAYA KUMAR Updated:
Thala Vs Thalapathi மோதல் ஸ்டார்ட்... பாட்டில் மோதிக்கொள்ளும் அஜித் Vs விஜய்Representative Image.

பாடல்களில் ஒருவரை ஒருவர் தாக்கி, ஒருத்தருக்கு ஒருத்தர் பதில் சொல்லி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் இரு நடிகர்களும். இது தமிழகத்தில் பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும். இப்போது மீண்டும் அதை ஆரம்பித்திருக்கிறார்கள். 

வாழ்க்கை ஒரு வட்டம்.. இங்க ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான் ! இது விஜய் நடித்த திருமலை படத்தில் வரும் வசனம். 

அதற்கு முன்பு அவர் நடித்த பகவதி, வசூகரா, புதிய கீதை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. அதேநேரம் அஜித் குமாருக்கு பதில் சொல்லும் விதமாக திருமலையில் இந்த டயலாக் வைக்கப்பட்டதாக அஜித், விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர். அதைப் பார்க்கும்போது முதலில் இது சும்மா சுவாரஸ்யத்துக்காக சொல்றாங்க என்றுதான் தோன்றியது. ஆனால் அஜித் இதற்கு பதிலடி கொடுக்குறேன் என்கிற பெயரில் இந்த டயலாக்கை தனது படத்தில் வைக்கும் வரை

"வாழ்க்கை ஒரு வட்டமோ, சதுரமோ கிடையாது மேலயும் கீழயும் போயிட்டு வர, எனக்கு அது நேர் கோடு தான், குறுக்க வரவன மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்" என 2004ம் ஆண்டு அவரின் ஜனா படத்தில் வசனம் பேசி நடித்திருப்பார் அஜித்குமார். 

அடுத்து வெளியான அட்டகாசம் படத்தில் வரும் உனக்கென்ன உனக்கென்ன படத்தில் அஜித் மீண்டும் விஜய்யைத் தாக்குகிறார். 

ஹிட்லராக வாழ்வது
கொடிது புத்தனாக வாழ்வதும்
கடிது ஹிட்லர் புத்தன்
இருவருமாய் நான் இருந்தால்
உனக்கென்ன 

இப்படி பாடல்வரிகள் வைத்து பாடலை எழுதிகிறார்கள். இதற்கு பதில் சொல்லும் விதத்தில், 

ஏய் ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னைப் போல் வாழ்ந்தால் போதும்
உலகம் ரொம்ப அழகு என விஜய் பாடுவது போல சச்சின் படத்தில் 2005ம் ஆண்டு பாடல் வெளியாகிறது. 

இதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து, 2015ல் விஜய் நடிப்பில் புலி திரைப்படம் வெளியாகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரங்கள் அனைத்தும் வேதாளம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.

அஜித் நடிப்பில் அதே வருடம் ஒரு படத்தின் டைட்டில் வெளியிடப்படுகிறது. வேதாளம். மீண்டும் போட்டி துவங்குகிறது.  வேதாளம் படத்தில் முக்கியமான பிஜிஎம் தெறி என்று வருகிறது. 

2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்துக்கு அந்த பிஜிஎம்-ல் வரும் வார்த்தையையே பெயராக வைக்கின்றனர். தெறி.  கூடவே என்னை அறிந்தால் படத்தில் அஜித் ஏற்று நடித்த டிசிபி விஜயகுமார் ஐபிஎஸ் போஸ்டிங்கை அப்படியே விஜய்க்கு கொடுக்கின்றனர். 

2016ம் ஆண்டு தெறி படத்தில் விஜய்யின் பெயர் விஜய் குமார்.  அடுத்த ஆண்டே விவேகம் படத்தில் அவருக்கு அஜய் குமார் என்று பெயர் வைக்கிறார் சிறுத்தை சிவா. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்