Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK 61 story பற்றி கசிந்த முக்கியமான தகவல்... வேற லெவல் சம்பவம்தான் போங்க!

UDHAYA KUMAR June 13, 2022 & 19:27 [IST]
AK 61 story பற்றி கசிந்த முக்கியமான தகவல்... வேற லெவல் சம்பவம்தான் போங்க!Representative Image.

ஹெச் வினோத்தின் இயக்கத்தில் 3வது முறையாக இணைந்துள்ளது அஜித் - போனி கபூர் இணை. முதலில் நேர்கொண்ட பார்வை படத்துக்காக போனி கபூர் அஜித்தை கேட்டபோது வினோத்தை அறிமுகப்படுத்தியவரே அஜித்தான். 

வினோத்தின் இயக்கத்தில் அஜித்துக்கு இருந்த நம்பிக்கை அடுத்தடுத்து 3 படங்களில் அவருடனேயே இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது அஜித் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 

மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தைப் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

சதுரங்க வேட்டை படத்தில் எப்படி உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாரோ அதே போல்தான் இந்த படத்தில் உண்மையான வங்கிக் கொள்ளைகளை மையமாகக் கொண்டு கதையை எழுதியுள்ளாராம். இதுதான் முதன்முதலில் ஹெச் வினோத் அஜித்துக்காக எழுதிய கதையாம். 

2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.  இதனால் ஆகஸ்ட் மாத முதல் அல்லது இரண்டாவது வாரத்திலேயே ஷூட்டிங் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்