Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61 Title செப்டம்பர் 1ம் தேதி வியாழக்கிழமை வருதாம்லே!

UDHAYAKUMAR August 22, 2022 & 17:56 [IST]
AK61 Title செப்டம்பர் 1ம் தேதி வியாழக்கிழமை வருதாம்லே!Representative Image.

அஜித் 61, ஏகே61, தல 61 னு ஆளாளுக்கு ஏதேதோ பேரு வச்சி கூப்பிட்டாலும், நம்ம அஜித்குமார் நடிக்குற அடுத்த படத்த பத்தின அப்டேட் மட்டும் வரவே மாட்டேங்குது. அஜித் வெளிநாடு போனப்ப வந்த புகைப்படங்களோட சரி வேற எதுவும் பெரிய அளவுல அஜித் பத்தியோ, படத்த பத்தியோ வரவே இல்ல. 

இந்நிலையிலதான் அஜித் படத்தோட டைட்டில் எப்ப ரிவீல் பண்ணப் போறாங்கன்னு படக்குழுவுக்கு நெருக்கமானவங்க கிட்ட விசாரித்தோம். அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி, வர்ற செப்டம்பர் 1ம் தேதி வியாழக்கிழமை டைட்டில் அறிவிப்பு நடக்கப்போகுதாம். 

போனிகபூர் தயாரிப்புல, நம்ம ஹெச் வினோத் இயக்கும் புதிய படத்தோட பெயர தெரிஞ்சிக்க ரசிகர்கள் ஆவலோட காத்திருக்காங்க. படத்துக்கு V எழுத்துலதான் பெயர் வைப்பாங்களாமேன்னு கேட்டப்ப, அந்த செண்டிமெண்ட்ட இந்த படத்துல ஒடைக்குறாங்களாம். படத்தோட பெயர் V ல தொடங்காது அப்படின்னும், படத்துக்கு தமிழ்ல பெயர் வச்சிருக்காங்கன்னு சொல்லிருக்காங்க. 

நம்ம சோர்ஸ் சொன்ன தகவலும் அதிகாரப்பூர்வ அப்டேட்ல வர்ற டைட்டிலும் ஒரே மாதிரி இருக்கான்னு பாத்து செக் பண்ணிட்டு ரிவீல் பண்ணலாம்னு இருக்கோம். செப்டம்பர் 1 தானே.. அது வரைக்கும் காத்திருப்போம். வரட்டா மக்களே.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்