Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61ல் அதிரடி மாற்றம்! டாப் கியருக்கு மாறும் ஷூட்டிங்!

UDHAYA KUMAR May 26, 2022 & 11:04 [IST]
AK61ல் அதிரடி மாற்றம்! டாப் கியருக்கு மாறும் ஷூட்டிங்!Representative Image.

அஜித் நடிக்கும் அடுத்த படமான ஏகே61  படப்பிடிப்பு நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஹைதராபாத்தில் ராமோஜி பிலிம்சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் திடீரென சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிக்கும் அடுத்த படம் வினோத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே படப்படிப்பும் டாப் கியரில் வேகமெடுத்துள்ளதாம். 

ராமோஜி பிலிம்சிட்டியில் 9 ஏக்கர் அளவுக்கு செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக அதிக அளவு தொகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் சென்னையில் இருக்கும் முக்கியமான இடங்கள் அப்படியே செட்டில் வடிவமைக்கப்பட்டு தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் ஷூட்டிங் ராமோஜியில் நடைபெற்று வருகின்றது. அஜித் மட்டுமே இதில் நடித்து வந்தார். மிகவும் பாதுகாப்பாக இந்த ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சமுத்திரகனி, கதாநாயகிகளாக மஞ்சு வாரியர் மற்றும் இன்னொரு நாயகியும் நடிக்கவுள்ளார்கள் என தகவல் வெளியானது. இவர்கள் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வியும் எழுந்தது. 

ஜூன் முதல் வாரத்துடன் இந்த கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக புதிய செட் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளதாம். அதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி ஆகியோருடைய காட்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

ஏகே61 திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. மேலும் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருக்கின்றனவாம். அதில் ஒரு சென்டிமெண்ட் பாடல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியிடப்படும் எனவும், அடுத்தடுத்து தொடர்ந்து அப்டேட்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.  

KEYWORDS:

ak 61 title name,   thala 61 movie name,  thala 61 movie release date,  thala 61 cast and crew,  thala 61 director,  ak 61 music director name,  ajith 61 music director,  ajith 61 update,  thala 61 heroine,  ak 61 heroine name,  ak 61 movie heroine name,  ak 61 movie name,


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்