Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செஞ்சிட்டா போச்சு! விஜய் படத்துக்கு தயாரான அட்லீ.. இதுதான் கதை

UDHAYA KUMAR May 25, 2022 & 19:05 [IST]
செஞ்சிட்டா போச்சு!  விஜய் படத்துக்கு தயாரான அட்லீ.. இதுதான் கதைRepresentative Image.

விஜய் கெரியரை ஒரு படி மேலே தூக்கிச் சென்ற இயக்குநர்களுள் ஒருவர் அட்லீ என்றால் மிகையில்லை. தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு விஜய் மார்க்கெட்டை 100 கோடிக்கு உயர்த்தியதில் இவரின் பங்கு இன்றியமையாதது. அப்படி அட்லீ இயக்கும் படங்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் காத்திருப்பார்கள். இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை இயக்கி வரும் அட்லீ, அடுத்ததாக தமிழில் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிகில் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதில் அப்பா வேடமான ராயப்பன் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருந்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களும் ராயப்பன் கதாபாத்திரத்தை ரசித்தனர். இதனை அமேசான் ப்ரைம் நிறுவன டிவிட்டர் பக்கத்தில் ராயப்பன் கேரக்டரை வைத்தே முழுக்க முழுக்க ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என கேள்வி கேட்க, அதை பகிர்ந்த அட்லீ செஞ்சிட்டா போச்சு என கூறியுள்ளார்.

இதனால் விரைவில் அட்லீ - விஜய் கூட்டணி உருவாகும் என ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்