Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்.. எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு.. | Mahabharat Movie Rajamouli

Nandhinipriya Ganeshan Updated:
10 பாகங்களாக உருவாகும் மகாபாரதம்.. எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு.. | Mahabharat Movie Rajamouli Representative Image.

பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு பெயர் போனவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 'நான் ஈ' படத்தை இயக்கியதன் மூலமாக கவனம் ஈர்த்த இவர், பின்னர் பிரபாஸ் நடிப்பில் 'பாகுபலி' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி வசூலில் வரலாற்று சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து வெளியான 'ஆர்ஆர்ஆர்' என்ற படமும் மரண ஹிட் அடித்தது. அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. தற்போது அவர் இயக்கபோகும் மகேஷ் பாபுவின் படமும் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜமௌலி ஒரு பிரம்மாண்ட அப்டேட்டை அறிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜமௌலியிடம், 'தொலைக்காட்சியில் 266 எபிசோடுகளாக  ஒளிபரப்பான மகாபாரதத்தை நீங்கள் படமாக்கினால் எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள்’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜமௌலி ‘மகாபாரதம் படமாக உருவானால் நிச்சயம் 10 அல்லது அதற்கு மேல் பாகங்கள் எடுக்க வேண்டிய நிலை வரும். இப்போதே எத்தனை பாகங்கள் என்பதை சரியாக கணிக்க முடியாது’ என்றும் தெரிவித்தார்.

மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு என்றும் ஆனால் அதற்கு நிறைய காலம் பிடிக்கும், அதாவது மகாபாரதத்தை முழுமையாக எடுப்பதற்கு எனக்கு 10 முதல் 12 ஆண்டுகள் தேவைப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். ஒருவேளை எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் மகாபாரதம் உருவானால் அது காலத்தால் அழியாத காவியமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்காது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்