Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசீம் என்னுடைய மருமகனே இல்லை.. போட்டுடைத்த ஷாநவாஸ் !

UDHAYA KUMAR Updated:
அசீம் என்னுடைய மருமகனே இல்லை.. போட்டுடைத்த ஷாநவாஸ் !Representative Image.

பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் பங்கேற்றிருக்கும் இறுதி போட்டியாளர் அசீம் தனது மாமா என ஆளூர் ஷாநவாஸைக் கூறி வரும் நிலையில் அவர் எனது மருமகனே இல்லை அது பொய் என போட்டு உடைத்திருக்கிறார் ஆளூர் ஷா நவாஸ். மேலும் அவர் விக்ரமனுக்கு ஆதரவாக பிக்பாஸில் ஓட்டு கேட்டுள்ளார் என்பதும் அதிர்ச்சியான விசயமாக பார்க்கப்படுகிறது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ், தனது தாய் மாமா எனவும் தனக்கு ஆளுங்கட்சியிலேயே ஆட்களைத் தெரியும் எனவும் பேசியிருந்ததாக கூறி இணையதளத்தில் வீடியோக்களை வைரல் செய்தனர் நெட்டிசன்கள்.  

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதி போட்டிக்குள் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் அசீம், விக்ரமன் இடையே மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. அசீம்தான் வெற்றி பெறுவார் என ஒரு குரூப்பும் விக்ரமன்தான் வெல்வார் என இன்னொரு குரூப்பும் மாறி மாறி ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில், விக்ரமன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினர் எனவும் அசீமின் தாய் மாமா அந்த கட்சியின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் நபர் எனவும் பேசி வருகின்றனர். 

அசீமே ஒருமுறை இவர் சாதாரண தொண்டர் எனவும் எனது மாமா சிட்டிங் எம்எல்ஏ எனவும் பேசியிருந்தார். இந்த வீடியோவும் வைரலானது. ஆனால் இவர் யாரை மாமா என்றாரோ அவரே இது பொய் என பேசியுள்ளார். 

தனக்கும் அசீமுக்கும் அறிமுகம் இருக்கிறது. அவரும் தானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்தான் ஆனால் அவர் என் அக்கா பையன் இல்லை. எனக்கு அக்காவே இல்லை. தங்கை ஒருவர்தான் இருக்கிறார் என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்