Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. ஏ.ஆர்.ரஹ்மானின் நேரலை நிகழ்ச்சி காணும் ஆர்வத்தில் மக்கள்..! | Maamannan Audio Launch Date And Time

Gowthami Subramani Updated:
மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. ஏ.ஆர்.ரஹ்மானின் நேரலை நிகழ்ச்சி காணும் ஆர்வத்தில் மக்கள்..! | Maamannan Audio Launch Date And TimeRepresentative Image.

மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள திரைப்படமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தயாரிப்பாளராக அறிமுகமாகி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலமாக, பல்வேறு திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். அதன் பின்னர், நடிகராக ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அறிமுகமாகி, 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர், அரசியலில் நுழைந்ததால், தனது சினிமா கெரியரை விட்டு, இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அந்த வகையில், உதயநிதி கடைசியாக நடித்த தமிழ்த் திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.

மேலும், இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் வைகைப் புயல் வடிவேலு, பகத் பாசில் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் மூலம், இந்தப் படம் மற்றும் படத்தில் வரும் பாடல்கள் மாஸ் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற ஏராளமான சிறப்புகளைக் கொண்ட இத்திரைப்படம் இந்த ஜூன் மாத இறுதியில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் பெர்ஃபார்மன்ஸ் தரப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் என்பதால், இதன் இசை வெளியீட்டு விழாவில் முதல்வர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்