Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PVR ஏரோஹப் சினிமாஸ் சென்னை - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR Aerohub Cinemas Chennai Ticket Booking

Nandhinipriya Ganeshan Updated:
PVR ஏரோஹப் சினிமாஸ் சென்னை - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR Aerohub Cinemas Chennai Ticket BookingRepresentative Image.

பொழுதுபோக்கிற்கு எத்தனையோ விஷயம் இருந்தாலும், திரைப்படம் பார்ப்பது மட்டும் நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கிறது. வீட்டில் பார்ப்பதை காட்டிலும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று பார்ப்பதையே அதிகம் விரும்புகிறோம். அந்தவகையில், தமிழகத்தில் அதிகப்படியான மக்களை ஈர்த்த திரையரங்காக PVR Cinemas இருந்து வருகிறது. ஹை-கிளாஸ் திரையரங்கங்களில் ஒன்றான இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தில் மட்டும் மொத்தம் 136 திரைகள் இருக்கின்றன. 

இங்கு ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களும் ஒளிபரப்படுகின்றன. இந்த தியேட்டர்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தபடுவதால், படம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் கதையின் ஒரு பகுதியாக நாம் மாறுவது போல உணரவை தருகிறது. அந்தவகையில், பிவிஆர் சினிமாஸ்க்கு சென்னையில் மட்டும் 12 திரையரங்கள் உள்ளன. அவற்றில் சென்னை விமான நிலைய வளாகத்திலும் ஒரு திரையரங்கம் உள்ளது. இது விமான நிலைய வளாகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மல்டிபிளக்ஸ் ஆகும்.

இந்த திரையரங்கம் சுமார் 1155 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது மற்றும் 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், படிக தெளிவான, ரேஸர் ஷார்ப், அல்ட்ரா-ப்ரைட் படங்கள் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ் ஹை டெபினிஷன் அமிர்சிவ் ஆடியோவுக்கான REAL D 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் நமக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கின்றன. 

ஆன்லைன் புக்கிங்:

இந்த தியேட்டர்களில் படம் பார்க்க ஆன்லைன் புக்கிங் மூலமும், நேரடியாகவும் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், ஆன்லைன் மூலமாக புக் செய்தால் நமக்கான சீட்டை நாமே தேர்வு செய்துக்கொள்ள முடியும். நேரடியாக டிக்கெட் வாங்கும் அந்த அப்ஷன் கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மூலம் புக் செய்வதால் கிஃப்ட் கார்டு, ஆஃபர், கூப்பன் போன்றவற்றை பயன்படுத்தி டிக்கெட்டின் விலையை குறைத்துக் கொள்ளலாம். எனவே, ஆன்லைன் முறையே சிறந்தது. மற்ற திரையரங்குகளை காட்டிலும் இங்கு விலை சற்று அதிகமாக இருந்தாலும், நிறைவான திரைப்படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும். 

சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்திருக்கும் PVR Cinemas தியேட்டரின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

PVR Aerohub Cinemas Address:

பிவிஆர் ஐநாக்ஸ் லிமிடெட்,

ஏரோஹப், 

ஏர்போர்ட் ரோடு,

மீனம்பாக்கம், 

சென்னை - 600016.

இந்த லிங்கை கிளிக் செய்து டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

Book Tickets

தமிழகத்தில் இருக்கும் PVR Cinemas தியேட்டர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

PVR Cinemas


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்