Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,070.40
64.46sensex(0.09%)
நிஃப்டி22,552.20
50.20sensex(0.22%)
USD
81.57
Exclusive

புஷ்பா 2 படக்குழு சென்ற பேருந்து விபத்து.. அதிர்ச்சியில் டோலிவுட்.. | Pushpa 2 Artists Accident News

Nandhinipriya Ganeshan Updated:
புஷ்பா 2 படக்குழு சென்ற பேருந்து விபத்து.. அதிர்ச்சியில் டோலிவுட்.. | Pushpa 2 Artists Accident NewsRepresentative Image.

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து கடந்த வருடம் வெளியான தெலுங்கு படம் "புஷ்பா". தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்ட இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்த படத்தில் சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' குத்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தற்போது இந்த பாட்டுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை. 

புஷ்பா படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். இதனால், அவர் நடித்த மற்ற படங்களையும் அனைத்து மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக மீண்டும் ராஷ்மிகா மந்தனா தான் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் யார்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். 

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், அனசூயா, சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், புஷ்பா 2 திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், ஒரு துயர சம்பவம் அறங்கேறியுள்ளது. அதாவது, புஷ்பா 2 படக்குழு சென்ற பேருந்து பெரிய விபத்திற்குள்ளாகியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் படக்குழு சென்ற பேருந்தின் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சில ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு பலத்த காயங்களும் மற்றவர்களுக்கு சிறிய சிராய்ப்புகளும்  ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் நேரவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்