Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

அருவி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Aruvi Serial

Nandhinipriya Ganeshan Updated:
அருவி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Aruvi SerialRepresentative Image.

அருவி சீரியல்: கடந்த 2021,18 அக்டோபர் மாதத்தில் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் அருவி. மாமியார் மற்றும் மருமகளின் அழகான உறவை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் ஜோவிதா ஜோன்ஸ், அம்பிகா, மற்றும் கார்த்திக் வாசுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் லாவண்யா தேவி ஆகியோர் துணை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் உதயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் கன்னட சீரியலான கஸ்தூரி நிவாசாவின் ரீமேக்காக இருந்தாலும், வேறுப்பட்ட கதைக்களத்தை கொண்டுள்ளது. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

அருவி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஜோவிதா ஜோன்ஸ்

அருவி

கார்த்திக் வாசுதேவன்

புகழேந்தி

அம்பிகா

சரஸ்வதி சிவக்குமார்

ஈஸ்வர் ரகுநாதன்

ஈஸ்வரமூர்த்தி

லாவண்யா தேவி  

லக்ஷ்மி ஈஸ்வர்

வி.ஜே.சாம்  

கலைசெல்வன்

கிரிஷ்   

விஸ்வநாதன்

ஜீவிதா

சிவசங்கரி

கிரித்திகா லட்டு

இந்து கலை

சூப்பர்குட் கண்ணன்

சிவக்குமார்

ஸ்வப்னா சரத்

நீலவேணி

சோனியா விக்ரம் 

வெண்ணிலா

 

அருவி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

அருவி

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 18 அக்டோபர் 2021

ஒளிப்பரப்பு நேரம்

02.30 PM - 03.00 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

வி.சாய்குமாரன் மேகா,

ஏ.ராமச்சந்திரன் (தற்போது)

தயாரிப்பாளர்

சங்கர் வெங்கட்ராமன்

எழுத்து

சைத்ரிகா ஹெக்டே

எடிட்டிங்

இ.தனசேகரன்

ஒளிப்பதிவு 

சிவிவன்சன்

இசையமைப்பாளர்

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ்

தயாரிப்பு நிறுவனம்

சன் என்டர்டெயின்மென்ட், ஷாக் ஸ்டுடியோஸ் (Shak Studios)

ஓடிடி தளம்

Sun Nxt

 

அருவி சீரியலின் கதை..

தாயில்லை என்றாலும் தைரியமான துணிச்சலான பெண்ணாக வருகிறாள் அருவி. அவள் தனக்கு பிடித்ததை எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்துகிறாள். அதேபோல், எந்த கருத்துக்களையும் யாருக்கும் பயமின்றி கூறுபவள். அவள் கதையின் நாயகனான புகழை விரும்பி இருவரும் திருமணமும் செய்துக்கொள்கின்றனர். புகழும் அருவியின் குணத்தை விரும்பி அவளுக்காக அனைத்தையும் மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறான். ஆனால் அவனது அனைத்து முடிவுகளும் அவனது தாயார் சரஸ்வதியால் நிர்வகிக்கப்படுகிறது. குடும்பம் பின்பற்ற வேண்டிய விதிகளை அமைத்து, சரஸ்வதி ஒரு கண்டிப்பான வீட்டுத் தலைவியாக வலம் வருகிறார்.

எல்லோரும் அவளுடைய கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும், அவள் என்ன முடிவெடுத்தாலும் அவர்கள் உடன்பட வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தை தயங்காமல் வெளிப்படுத்துவராக இருக்கிறார். ஆனால், அருவியை திருமணம் செய்துக்கொண்டதன் மூலம் புகழே முதன்முறையாக சரஸ்வதிக்கு எதிராக செல்கிறார். இதை கண்டு சரஸ்வதி வருத்தப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், அருவி மாமியார் சரஸ்வதி அமைத்த அனைத்து தடைகளையும் உடைக்கிறாள். இந்த விஷயங்கள் அவர்களைச் சுற்றி ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகின்றன. அவர்களுக்கிடையே புகழ் எப்படி சமாதானத்தை ஏற்படுத்துகிறார் என்பது அருவி சீரியலின் கதைக்களம்.

அருவி சீரியல் இன்றைய எபிசோட்

அருவி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

அருவி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் அருவி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்