Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100, 200 இல்ல.. 10 ஆயிரம் கோடியாம்! ருத்ரதாண்டவமாடும் அவதார்! | Avatar box office collection world wide report

UDHAYA KUMAR Updated:
100, 200 இல்ல.. 10 ஆயிரம் கோடியாம்! ருத்ரதாண்டவமாடும் அவதார்! | Avatar box office collection world wide reportRepresentative Image.

உலகம் முழுக்க 3500 கோடி வசூல் சாதனை செய்துள்ளது அவதார் படத்தின் இரண்டாம் பாகமான தி வே ஆஃப் வாட்டர். வெளியான 3 நாட்களிலேயே இத்தனை கோடி என்பதால் மிகப்பெரிய சாதனை படைக்கப் போகிறது என உலகம் முழுக்க கொண்டாடி வருகின்றனர். 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் அவதார். இந்த படம் வெளியான நாளிலிருந்து உலகம் முழுக்க வசூல் சாதனை செய்து அசத்தியிருந்தது. அன்றிலிருந்து 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவதார் படத்தினை வெளியிட்டுள்ளனர். இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. மிகப் பெரிய பொருட்செலவில், 7500 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஹாலிவுட் வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவு பட்ஜெட் படமான இந்த படம், ரசிகர்களுக்கு மிகப் பெரிய விஷுவல் ட்ரீட். படத்தின் கதை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், படம் பெரும்பாலானவர்களுக்கு பிடித்துள்ளது. இப்போது வரை 3500 கோடி வசூல் செய்து கிட்டத்தட்ட பாதியை நெருங்கி வருகிறது.  இந்த வாரம் 7500 கோடி ரூபாயை நெருங்கும் எனத் தெரிகிறது. அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தினங்களை மனதில் வைத்து பார்க்கும்போது,  10 ஆயிரம் கோடியை நிச்சயம் தொடும் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்