Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi Today Episode: கோபிக்கு இன்னொரு குடும்பம் இருக்கு... உண்மையை போட்டுடைத்த செல்வி... கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 20:07 [IST]
Baakiyalakshmi Today Episode: கோபிக்கு இன்னொரு குடும்பம் இருக்கு... உண்மையை போட்டுடைத்த செல்வி... கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!Representative Image.

Baakiyalakshmi Today Episode: பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி சீரியலின் மகா சங்கமம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், கோபியின் மொத்த நாடகமும் முடிவுக்கு வந்து விட்டது. கோபி-ராதிகா உறவை பற்றி தனத்துக்கும் மூர்த்திக்கும் தெரிந்துவிட்டது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக மூர்த்தி ராதிகா வீட்டிற்கு சென்று கோபியை நம் வேண்டாம் என்றும் அவர் நல்லவர் இல்லை என்றும் உண்மையை கொட்டுகிறார். இதனால், ராதிகாவும் பயங்கர ஷாக், இத பத்தி கோபியிடம் பேச துடித்து கொண்டிருக்கிறார். 

அதே மாதிரி தனமும் பாக்கியாவிடம் சுற்றி வளைத்து கோபி விஷயத்தில் கவனமாய் இருங்கள் என்று சொல்கிறார். இதோடு அர்த்தம் புரியாமல் குழப்பதில் இருக்கிறார். தே போல், கடைசி நேரத்தில் கோபிக்கும் மூர்த்திக்கும் சண்டை வெடிக்க மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது. 

இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கோபியிடம் ஈஸ்வரி அம்மா என்ன பிரச்சனை? என்று விசாரிக்கிறார். கோபி பொய் பேசுவதை அவர் கண்டுபிடித்து விடுகிறார். இது ஒருபுறம் இருக்க, செல்வி அக்கா மீது பாக்கியா கடும் கோபப்படுகிறார். காரணம், கோபிக்கு வேற ஒரு குடும்பம் இருக்கிறது என எனக்கு சந்தேகமாக இருக்கிறது என செல்வி அக்கா கூறியதை பாக்கியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஆனால், பாக்கியா, கோபி பெண்கள் விஷயத்தில் ராமர் என்கிறார். ஆனால் இதை அவரின் செல்ல மகனும் எழிலும் மறுக்கிறார். ஏனெனில், எழிலுக்கு கோபியை பற்றிய சில உண்மைகள் தெரியும். இதனால், எழிலும் அப்பாவை நம்ப வேண்டாம் என்று அட்வைஸ் செய்கிறார். 

மொத்த குடும்பமும் இப்படி கோபியை தப்பாக பேச பாக்கியா உடைந்து போய் நிற்கிறார். என்ன நடக்கப்போகிறதோ என்று பதறுகிறார். இதோடு இன்றைய எபிசோடிடு முடிவடைகிறது. இன்றைய எபிசோடின் கடைசியில் ராதிகா கோபியை சந்தித்து பேச வேண்டும் என்று உடனே அவரை வீட்டுக்கு வர சொல்கிறார். அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ...? பொறுத்திருந்து பார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்