Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!

Priyanka Hochumin October 07, 2022 & 14:15 [IST]
மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!  Representative Image.

Tamil Saraswathiyum Serial Today Episode: இந்த சீரியல் பொறுத்த வரைக்கும் ஒரு பிரச்சனை ஆரம்பிச்சு ரெண்டு வாரத்துக்கு மேல இழுத்தடுச்சு அப்புறம் ஒரு எபிசோடு மட்டும் நல்லா பரபரப்பா நடக்கும். அப்படியான எபிசோடு தான் இன்னைக்கு. வாங்க என்னென்னு பாக்கலாம். தமிழ் மாமா போதைல என்னைய கெடுத்துட்டாருன்னு அபாண்டமா பலி சுமத்துகிறாள் மது. ஆனா அது பொய்னு சரஸ்வதி நிரூபிக்கும் அந்த சுவாரஸ்ய எபிசொட் தான் இது.

மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!  Representative Image

இதுவரை நடந்தது....

தமிழ் மாமா என்ன கெடுத்துட்டாருன்னு தன்னோட அப்பா அம்மா கிட்ட சொல்லி பிரச்சனைய பெருசாகுறாள் மது. இதுவும் சந்திரகலாவோட மாஸ்டர் பிளான். இதுலையாவது தமிழ் சரஸ்வதிய தோற்கடிக்கணும்னு போராடுகிறாள். அப்புறம் மது அப்பா அம்மா தமிழ் வீட்டுக்கு வந்து பிரச்சனை பன்றாங்க. ஒழுங்கா உங்க பையன் தமிழ மது கழுத்துல தாலி கட்ட சொல்லுங்கன்னு. அப்ப சரஸ்வதி என்னோட புருஷன் எந்த தப்பும் பண்ணல இன்னும் 24 மணி நேரத்துல நான் நிரூபிக்கிறேன்னு சொல்ராங்க.

மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!  Representative Image

இன்றைய எபிசோடு

அதே மாறி இன்னைக்கு ஒட்டு மொத்த குடும்பமும் பரபரப்பா ஒரு இடத்துல ஆஜராகி காத்துட்டு இருக்காங்க. சந்திரகலாவும் நம்ப ஜெயிக்க போறோம்னு ரொம்ப தெனாவட்டா நின்னு வேடிக்க பாத்துட்டு இருக்காங்க. கரெக்ட்டா மதுவும் அவளோட குடும்பமும் வராங்க. ம்ம் காமிங்க உங்ககிட்ட இருக்குற ஆதாரத்தைன்னு கேக்குறாங்க. நமச்சியும் சரஸ்வதியும் ஒருத்தருக்காக காத்துட்டு இருக்காங்க. அந்த கேப்ல மதுவோட அம்மா இதுலையே தெரில உங்க புள்ள தப்பு பன்னிருக்காருனு. இப்பவே மது கழுத்துல தாலி கட்டணும்னு தமிழ் கைல தாலிய கொடுக்கிறாள்.

மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!  Representative Image

புடிங்க சார் இவள....

அப்ப கரெக்ட்டா ஒருத்தவங்க வராங்க. அது யாருன்னா மது அடிக்கடி இர்ரெகுலர் பீரியட்ஸ்-காக ஒரு டாக்டர பாக்க போவலாம். அவங்க தான் இன்னைக்கு வந்து மதுவோட முகத்தரிய கிளிச்சது. அவங்க வந்த உடனே மது கர்பமாக வாய்ப்பே இல்ல. அவங்க இர்ரெகுலர் பீரியட்ஸ்-காக என்கிட்ட தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க. இன்னைக்கு கூட என்னைய பாக்க வந்தாங்க. அப்படி இருக்கும் பொது அவங்க எப்படி கர்பமாக முடியும்னு சொல்றாங்க. அப்புறம் அவங்க கிட்ட இருக்குற எல்லா ஆதாரத்தையும் காமாச்சி தமிழ் எந்த தப்பும் செய்யலன்னு சொல்ராங்க

மாட்டிக்கொண்ட மது...வெறிகொண்டு அடிக்கும் கோதை...நல்லவேல நாம தப்பிச்சோம் என்று சந்திரகலா!  Representative Image

தர்மடி வாங்கும் மது!

அங்க சைடுல ச்ச மொத்த பிளானும் போச்சேன்னு பீல் பன்றாங்க சந்திரகலா. அந்த டாக்டர் போனதுக்கு அப்புறம் எதுக்கு இப்படி பண்ணணு மதுவ சாத்து சாத்துன்னு சாத்துறாங்க கோதை. நாம கூட ஆர்வமா காத்துட்டு இருப்போம் சந்திரகலா மாட்டிக்குவான்னு. ஆனா அப்படி எதுவும் நடக்கல, மது வந்து சரஸ்வதிய பலி வாங்க தான் இப்படி பன்னேனு சொல்லிடறா. எதுக்குன்னா " நீ அன்னைக்கு ஹோட்டல்ல என்னோட லவ்வர் முன்னாடி அசிங்க படுத்தின அதுனால அவன் என்னைய விட்டுட்டு போய்ட்டான். அப்புறம் உன்னோட பாடி என்னோட ஆபீஸ்-க்கு வந்து எல்லாரு முன்னடியும் வெளக்கமாத்தால் அடிச்சாங்க" அதுக்கு தான் நான் இப்படி பன்னேனு சொல்றா. எப்படியோ பிரச்சனை முடிஞ்சதுனு வீட்ல இருக்குற எல்லாரும் சரஸ்வதியை பாராட்டி தள்றாங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்