Tue ,Feb 27, 2024

சென்செக்ஸ் 73,107.70
317.57sensex(0.44%)
நிஃப்டி22,202.85
80.80sensex(0.37%)
USD
81.57
Exclusive

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Baakiyalakshmi Serial

Priyanka Hochumin Updated:
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Baakiyalakshmi SerialRepresentative Image.

பாக்கியலட்சுமி   சீரியல்: கடந்த 27 ஜூலை 2020-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஸ்ரீமோயி என்னும் பெங்காலி தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, ரேஷ்மா பசுபுலேட்டி, சதீஷ் குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி

பாக்கியலட்சுமி

ரேஷ்மா பசுபுலேட்டி

ராதிகா

சதீஷ் குமார்

கோபிநாத்

ரஞ்சித்

பழனிசாமி

எஸ்.டி.பி. ரோசரி

ராமமூர்த்தி

ராஜ்யலட்சுமி

ஈஸ்வரி ராமமூர்த்தி

விகாஷ் சம்பத்

செழியன்

திவ்யா கணேஷ்

ஜெனிபர்

விஜே விஷால்

எழிலன்

ரித்திகா தமிழ் செல்வி

அமிர்தா

நேஹா மேனன்

இனியா கோபிநாத்

 

பாக்கியலட்சுமி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

பாக்கியலட்சுமி  

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

 27 ஜூலை 2020

ஒளிப்பரப்பு நேரம்

8.30 PM - 09.00 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

சிவசேகர் மற்றும் I. டேவிட்

தயாரிப்பாளர்

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பு நிறுவனம்

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

பாக்கியலட்சுமி   சீரியலின் கதை..

இந்த தொடரின் முக்கிய கதாநாயகி பாக்கியலட்சுமி ஒரு அக்மார்க் குடும்ப பெண். இவரின் குடும்பத்தில் கணவர், மூன்று பிள்ளைகள், மாமனார், மாமியார் என்று ஒரு கூட்டு குடும்பம். பாக்கியா படிக்காதவர் என்பதால் கோபி [கணவன்], செழியன் [மூத்த மகன்], இனியா [இளைய மகள்] மற்றும் ஈஸ்வரி [மாமியார்] சரியாக மதிக்க மாட்டார்கள். ஆனால் பாக்கியாவிற்கு எழில் [இரண்டாவது மகன்] மற்றும் ராமமூர்த்தி [மாமனார்] சப்போர்ட்டாக இருக்கின்றனர். கோபி எந்நேரமும் பாக்கியாவை அவமானப்படுத்திக் கொண்டே இருப்பார். அவரின் முன்னாள் காதலி ராதிகாவை மீண்டும் சந்தித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தை இரண்டு குடும்பத்திற்கும் தெரியாமல் அசால்ட்டாக சமாளிக்கிறார். ஆனால் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் பிரெண்ட்ஸ் ஆனதும் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. சிறிது நாட்களில் கிபி பாக்கியவை விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இவரின் இந்த செயல் முதலில் ராமமூர்த்தி மற்றும் எழிலுக்கு தெரிய வருகிறது. இருப்பினும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் சமாளிக்கின்றனர். ஆனால் கோபி - ராதிகாவின் தொடர்பு குறித்து குடும்பத்தில் இருக்கும் அனைவர்க்கும் தெரிய வருகிறது. அந்த தருணத்தில் பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்கிறாள். அதற்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து பாக்கியாவிடம் கோவித்துக்கொள்கின்றனர். பின்னர் கோபி மற்றும் ராதிகா திருமணம் செய்து கொள்வதைத் தெரிந்துக் கொண்ட அதே குடும்பத்தினர் அனைவரும் பாக்கியா பக்கம் உறுதுணையாக நிற்கின்றனர். இதுவே பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம்.

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் பாக்கியலட்சுமி   சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்