Baakiyalakshmi Today Full Episode: பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஒருவாரமாகவே பரபரப்பின் உச்சத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அடுத்தக்கட்ட பரபரப்பாக இன்று ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் தெரியவரும் உண்மையால் சீரியலில் அடுத்தது என்ன நடக்கும் என்று அனைவரும் குழம்பியுள்ளனர். இன்னைக்கு எபிசோடில், பாக்கியா கோபியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டு தள்ள, கோபி எதுவும் தெரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போ எழில் அப்பா தப்பு பண்ணி இருக்காரு அது எனக்கு முன்னாடியே தெரியும் இத வெளியில சொல்ல முடியாம எனக்குள்ளயே போட்டு குழம்பிக்கிட்டு இருந்துள்ளதாக சொல்கிறார். அதேபோல கோபியின் அப்பாவும் இவரு வேற ஒரு பொண்ணு பின்னாடி போய் ரொம்ப நாள் ஆச்சு என சொல்ல, அதற்கு ஈஸ்வரி அம்மா நம்ப மாட்டேனு சொல்கிறார்.
அதற்கு பாக்கியா பாருங்க உங்க அம்மா இன்னமும் உங்கள நம்பிட்டு இருக்காங்கன்னு சொல்ல, உங்களுக்கு என்ன பிரச்சனை அத எப்படி தீர்த்து வைக்கிறதுனு யோசிச்சு யோசிச்சு பண்ணுன எங்கள இப்படி ஏன் நடிச்சி ஏமாத்துனீங்க சொல்லுங்க என பாக்கியா கேள்வியாக கேட்டு வாட்டி எடுக்கிறார்.
இதை பாத்துகிட்டு கோபமான ஈஸ்வரி ஹாஸ்பிட்டல்ல அப்படி என்ன தான் நடந்துச்சின்னு கேட்க, அதுக்கு பாக்கியா எனக்கு முன்னாடியே இவரு வேற ஒருத்தர போன் பண்ணி வர வச்சிருந்தாரு அவங்க தான் இவருடைய மனைவினு கூடவே இருந்தாங்க. அப்பறம் அங்க நடந்த எல்லாத்தையும் போட்டு உடைக்கிறார் பாக்கியா, இதை கேட்ட கோபி அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாம திகைத்துபோய் நிற்கிறார்.
இப்படி பேசிட்டு இருக்க, இன்னும் அந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சா நீங்க எப்படி தாங்குவீங்களானு தெரியலுனு சொல்ல, உடனே ஈஸ்வரி அது யாருனு சொல்லு என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா கோபியிடம் நீங்க சொல்றீங்களா நான் சொல்லவா என கேட்க கோபி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா என கூற இன்னமும் இப்படி நடிக்கிறதுக்கு உங்களுக்கு வெக்கமாக இல்லையா என திட்டி தீர்க்கிறார்.
கடைசியில ஆத்திரத்தின் உச்சத்துக்கே போனா பாக்கியா, ஹாஸ்பிட்டல் வந்தது, ஃபீஸ் கட்டுனது, இவருடைய கைய பிடிச்சி பேசிட்டு இருந்தது வேறு யாரும் இல்லை ராதிகா தான் என பெரிய குண்டை தூக்கிப்போடுகிறார். இதை கேட்ட ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் திகைத்து போய் நிற்கின்றனர். அதிலும் கோபியின் முகத்தில் ஈ ஆடவில்லை. அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
Tags:
Baakiyalakshmi Today Full Episode | Baakiyalakshmi Tamil | Baakiyalakshmi 09.07.2022 episode | Baakiyalakshmi today episode written update
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…