Sat ,Mar 02, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலான்னு...கமலாவும் வாத்தியாரும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க! அடுத்து?

Priyanka Hochumin July 09, 2022 & 13:50 [IST]
Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலான்னு...கமலாவும் வாத்தியாரும் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க! அடுத்து?Representative Image.

Thendral Vanthu Ennai Thodum Today Episode: என்ன தான் காதலிக்கும் இரண்டு மனங்கள் சேர்ந்தாலும், அதை ஏற்க மறுக்கும் குடும்பத்தினர். இனி அவர்களின் மனதை மாற்றி ஒன்றாக போவது எப்படி என்பது தான் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஆகும்.

நேற்றைய எபிசோடு | Vijay TV Latest Promo

காலம் நெருங்க நெருங்க தன் மனைவி மீதுள்ள காதலை மறக்க முடியாமல் அபியின் திருமணத்தை நிறுத்தி ஒன்று சேருகிறான் வெற்றி. இவர்கள் ஒன்று சேர்ந்ததும் குடும்பத்தினர் கடுப்பாகிறார்கள். வெற்றியின் குடும்பத்தினர் இவர்களை கண்ட வகையில் பேசுகின்றனர். வெற்றியின் தாய் கமலா வெற்றியை திட்ட, பிறகு அபியையும் திட்டுகிறார். உன்னால தாண்டி ஏன் பையன் இப்படி ஆகிட்டான், நீ தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சல்ல அப்படியே போக வேண்டியது தானே எதுக்கு இப்படி பண்ண என்று அழுதுகொண்டே கேட்கிறாள். இப்ப வெற்றி, நீ தேவையில்லாம அபி மேல பழி போடாதம்மா நீ எப்படி என்னைய பிளாக் மெயில் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினியோ அதே மாறி தான் அவர்கள் அப்பாவும் பண்ணாரு. இதுல நாங்க ரெண்டு பேரும் வேற என்ன பண்றது சொல்லு என்று கண்ணீருடன் பேசுகிறான்.

இதுல இவங்க ரெண்டு பேரு மேலையும் எந்த தப்பும் இல்ல. ஆனா இவங்க தான் இப்ப குற்றவாளிங்க என்ன கொடுமை இது. அங்க அபி வீட்ல ஜட்ஜ் சங்கரநாராயணன் அவமானம் தாங்க முடியலாம் துப்பாக்கி எடுத்து தற்கொலை பண்ண ட்ரை பண்றாரு. இங்க வெற்றி குடும்பத்தில் அதுக்கு மேல, வீட்ல இருக்குறவங்க மனசு மாறினாலும் இந்த சித்ரா அன்பு அவங்கள விட மாட்டாங்க போல. கூட்டா சேந்து பிளான் பன்னிட்டு இருக்காங்க.

இன்றைய எபிசோடு | Thendral Vanthu Ennai Thodum Serial

இங்க ரெண்டு குடும்பமும் நொறுங்கி போய் உக்காந்துட்டு இருக்காங்க. ஆனா அபி வெற்றி கோவில்ல ரொமான்ஸ் பன்னிட்டு இருக்காங்க. அப்ப கரெக்ட்டா வந்தாரு பாருங்க நம்ப சாமியார், என்ன சந்தோசமா இருக்கீங்களா? இனிமே தான் உங்க வாழ்க்கையில பூகம்பமே வர போகுது என்று ஹை பிட்ச்ல சொல்றாரு. அதுக்கு நம்ப ஹீரோ அபி கைய புடிச்சுகிட்டு, என்ன ஆனாலும் பரவால்ல இவ என் பக்கத்துல இருக்குற வரைக்கும் நான் எதையும் சமாளிப்பேன் என்று சொல்கிறான். அதுக்கு சாமியார், நல்லது இனிமே இந்த கைய கெட்டியமா புடிச்சிக்க என்று சொல்லி விட்டு மறைஞ்சிடுறாரு.

இவ்ளோ நடந்தும் கெத்தா வீட்டுக்கு வராங்க அபியும் வெற்றியும். வந்த உடனே கமலா எந்த தெரியாதுள்ள இங்க வந்தீங்க, போங்க வெளியன்னு கத்துறாங்க. நந்தினி மாமா நீங்களாவது சொல்லுங்க, எதுனாலும் வீட்டுக்குள்ள வந்து பேசிக்கலாம் என்று சொல்கிறாள். அதுக்கு அவரு முடியவே முடியாது, இத்தனை வருசமா என் பொண்டாட்டிய கண் கலங்காம வச்சிருந்த. ஆனா இவனால அவள் தினமும் அழுகுறா என்னால எப்படி பாத்துட்டு சும்மா இருக்க முடியும் என்கிறார். மனுஷனா சொன்ன வார்த்தையை காப்பாத்தணும், அப்படி முடியாதவன் வாக்கு குடுக்க கூடாது. இவனும் உருப்பட மாட்டான், இவன நம்பி வந்த இந்த பொண்ணு என்ன ஆகுமோன்னு தெரியல என்று சொல்கிறார். உடனே அபி நீங்க என்ன வேணாலும் நம்புங்க மாமா, ஆனா ஒரு நாள் வெற்றிய பாத்து நீங்க பெருமை படுற மாறி இவர் கூட நான் வாழத்தான் போறேன் என்று சொல்லி விட்டு வெளியே செல்கின்றனர். நந்தினி வந்து இங்க இப்ப நிலைமை சரியில்ல, அதுனால கொஞ்ச நாள் வெளிய இருங்க. நான் எப்படியாவது பேசி இவங்க மனச மாத்துறேன்னு சொல்கிறாள். ச்ச என்ன ஒரு பாசம், இரண்டு பெரும் அந்த இடத்தை விட்டு கிளம்புறாங்க இத்துடன் இந்த வார தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோடு நிறைவடைகிறது.

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்