Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கை ஓங்கிய கோபி! ராதிகா வச்ச செக்... உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க!

UDHAYA KUMAR May 27, 2022 & 13:15 [IST]
கை ஓங்கிய கோபி! ராதிகா வச்ச செக்... உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க!Representative Image.

பாக்யலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. விறுவிறுப்பு நிறைந்து போகும் இந்த கதையில் கோபி காத்து வாக்குல ரெண்டு காதல் செய்துகொண்டிருக்கிறார். மனைவி ஒரு பக்கம் காதலி ஒரு பக்கம் என தள்ளாடுகிறார். இந்நிலையில், கோபத்தின் உச்சியில் கோபி கை நீட்ட, பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகிக் கொண்டே போகிறது. மக்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். டிஆர்பி எகிறிக் கொண்டே இருக்கிறது. காரணம் கோபி, ராதிகா, பாக்யா ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டம். தனது இளமை கால காதலி ராதிகாவை, எதேச்சையாக சந்திக்கும் கோபிக்கு மீண்டும் காதல் துளிர்க்கிறது.  தனது காதலை நிராகரித்து வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்த தந்தை, என்ன சொன்னாலும் செய்யும் அம்மா, பாசம் நிறைந்த மனைவி, குழந்தைகள் என நல்ல குடும்பத்தை விட்டுவிட்டு காதலியைத் தேடி போகும் அளவுக்கு எந்த பிரச்னையும் கோபிக்கு இல்லை. ஆனால் ராதிகாவிடம் தனது குடும்பத்தை மோசமாக காட்டி வருகிறார். 

ராதிகாவுக்கு பாக்யாவை டீச்சராகவும், அவரது குடும்பத்தை அன்பு மிகுந்த நல்ல குடும்பமாகவும் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், கோபியின் மனைவிதான் பாக்யா என்றும் அவரது குடும்பம்தான் அது எனவும் யாருக்கும் தெரியாது. இதனை மறைத்து வரும் கோபிக்கு இப்போது ஒரு சிக்கல். 

ராதிகா கோபி வீட்டுக்கு வரவேண்டும் என அடம்பிடிக்கிறார். ஆனால் கோபி வரவேண்டாம் என்கிறார். இது கொஞ்சம் சீரியஸாக செல்ல கோபித்துக் கொண்டு நான் கண்டிப்பாக வரப்போகிறேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிடுகிறார் ராதிகா. இதனை கேட்டதும் செய்வதறியாத கோபி கோபப்படுகிறான். 

இந்நிலையில், இனியா தாத்தா பேச ஆரம்பித்து விட்டார் எனவும் தனது ஃபோனில் ரெக்கார்டு செய்து வைத்திருப்பதாகவும் கூற கோபி கோபப்பட்டு அவளை அடிக்க கை ஓங்குகிறான். ஏற்கனவே அவன் ராதிகா இங்கு வரப் போகிறாள் என்கிற டென்சனில் இருந்தான். இப்படி டென்சன் மேல் டென்சன், சரி ராதிகா வீட்டுக்கு போவோம் என கிளம்பிச் செல்கிறான். 

ராதிகாவோ நிச்சயமாக உங்கள் வீட்டுக்கு நாளை போகிறோம் என அடம்பிடிக்கிறாள். ஏன் இப்படி கட்டாயப்படுத்துறனு கேட்கும்போது, அதற்கு ராதிகா ஒரு குண்டை தூக்கி போடுகிறாள். அடுத்த கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது பாக்யலட்சுமி சீரியல். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்