Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

உண்மையை தெரிந்துகொண்ட பாரதி...முடிவுக்கு வர போகிறதா...பாரதி கண்ணம்மா?

Priyanka Hochumin Updated:
உண்மையை தெரிந்துகொண்ட பாரதி...முடிவுக்கு வர போகிறதா...பாரதி கண்ணம்மா?Representative Image.

Bharathi Kannama Today Episode Tamil: இத்தனை நாளா நாம காத்துட்டு இருந்த அந்த தருணம் வந்துவிட்டது. இதுக்கு மேல பாரதி கண்ணம்மா சீரியல் தொடருமா இல்ல இத்தோட முடிவுக்கு வருமா என்று பார்ப்போம்.

வீட்ல யாருக்கும் தெரியாம பாரதி அவனுக்கு ஹேமா, லட்சுமி ரெண்டு பேருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்குறாரு. ஆனா அது கிடைக்குறதுக்குள்ள ஒரு மாசம் ஓடி போச்சு. அப்புறம் இந்த முறை டிஎன்ஏ டெஸ்ட்ல எந்த குழப்பமும் ஏற்பட கூடாதுன்னு கெளம்பி டெல்லிக்கே போறாரு பாரதி. இப்ப அங்க கோவில்ல டெஸ்ட் ரிசல்ட் கண்ணமாக்கு சாதகமா இருக்கணும்னு வேண்டிட்டு இருக்காரு. என்னத்த சொல்றது!

உண்மையை தெரிந்துகொண்ட பாரதி...முடிவுக்கு வர போகிறதா...பாரதி கண்ணம்மா?Representative Image

இங்க தன்னோட அப்பா யாருன்னு தேடிட்டி ஹேமா வெளிய போறா. அங்க வெண்பா ஆளுங்கள வச்சு ஹேமாவ கடத்தி வித்திடுறாங்க. ஹேமா காணோமேன்னு கண்ணம்மா, அஞ்சலி எல்லாரும் தேடிட்டி இருக்காங்க. அப்ப ஹேமா அனுப்பிச்ச லைவ் லொகேஷன் வச்சு போறாங்க. ஒருவழியா கடைசியா ஹேமா இருக்குற டிரக்க கண்டுபிடிச்ச காப்பாத்திடுறாங்க. ஆனா ஹேமா மயங்கி விழுந்துள்ள எல்லாரும் பயந்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்க. அங்க எல்லாரும் அழுதுட்டே என்ன பண்றது, பாரதி கிட்ட சொல்லணுமேன்னு பல குழப்பத்துல இருக்காங்க.

உண்மையை தெரிந்துகொண்ட பாரதி...முடிவுக்கு வர போகிறதா...பாரதி கண்ணம்மா?Representative Image

இங்க இத்தனை வருசமா எதிர்பார்த்த அந்த நாள் வந்துடுச்சு. பாரதி டெஸ்ட் ரிசல்ட்ட வாங்க வந்துட்டாரு. அங்க இருக்குற டாக்டர் எதனால இந்த டெஸ்ட் எடுத்தீங்கன்னு கேக்குறாரு. பாரதியும் பழைய கதைய சொல்ல ஆரம்பிக்கிறாரு. கடைசில சொல்லி முடிச்ச உடனே நீங்க பெத்த புள்ளைங்களையே சந்தேகம் பட்டுட்டீங்களேன்னு சொல்லிடாரு. பாரதி அதிர்ச்சியில அப்படியே உறஞ்சி போயிட்டாரு. ஆனா நான் டெஸ்ட் பண்ணப்ப என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. இல்ல உங்க மூனு பேத்தோட டிஎன்ஏ-வும் 100% மேட்ச் ஆகுது. இத்தோட இன்றைய எபிசோடு முடியுது, இதுக்கு மேல பாரதி என்ன செய்யப்போறாரு, மீண்டும் குடும்பம் ஒன்று சேருமா, அதுக்கு அப்புறம் சீரியல் முடிய போகுதான்னு வெயிட் பண்ணி பாப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்