Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bharathi Kannamma Latest Promo: முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்...ப்ரோமோ மூலம் மறைமுகமாக கூறும் உண்மை!

Priyanka Hochumin September 20, 2022 & 16:40 [IST]
Bharathi Kannamma Latest Promo: முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா சீரியல்...ப்ரோமோ மூலம் மறைமுகமாக கூறும் உண்மை!Representative Image.

Bharathi Kannamma Latest Promo: இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்க இருபத்தை விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட ப்ரோமோவில் நமக்கு தெரிவது என்னவென்றால், மக்களே போதும் போதும் என்று சொல்ற அளாவிற்கு கொண்டுபோயிட்டு இருக்காங்க. அதுனால் அவங்களே மனசு வந்து சீரியலை முடிக்க போறாங்கன்னா இல்லையான்னு இந்த வார இதுக்குள்ள தெரிஞ்சிடும்.

சரி இப்ப ப்ரோமோவில் இந்த வாரம் என்ன நடக்கும் என்று பார்ப்போம். நேற்றைய எபிசோடில் கண்ணம்மா கொடுத்த க்ளூ மூலம் போலீஸ் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதலை நடத்துகின்றனர். அந்த தாக்குதலில் போலீஸ் எப்படியேனும் தீவிரவாதிகள் கொன்று கொஞ்சம் கொஞ்சமாக ஹைஜாக் செய்யப்பபட்ட மக்களை காப்பாற்றுகின்றனர். கண்ணம்மாவோ குழந்தைகளையும் அஞ்சலியையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பாரதி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறாள்.

ஆனால் போகிற வழியில் தீவிரவாதிகள் அவளை கொல்ல முயல்கின்றனர். இருப்பினும் அதையும் தாண்டி கண்ணம்மா பாரதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறாள். அங்கு பாரதியின் கைகள் கட்டப்பட்டு உடலில் வெடிகுண்டை சேர்த்து கட்டப்பட்டிருப்பதை பார்த்த கண்ணம்மா திகைத்துப்போகிறாள். அதை எப்படியாவது பாரதியின் உடலில் இருந்து அகற்ற கண்ணம்மா முயற்சிக்கும் போது பாரதி இதை எதுவும் பண்ண முடியாது, நீ இங்க இருந்து தப்பிச்சு போ என்று சொல்கிறான். ஆனால் கண்ணம்மாவோ அதெல்லாம் முடியாது, இங்க இருந்து போனா ரெண்டு பேரும் சேர்ந்து உயிரோட போலாம், இல்லைன்னா சேர்ந்து செத்து போலாம் என்று கூறுகிறாள்.

என்ன ஆனாலும் உங்கள விட்டு போக மாட்டேன் என்று பாரதியை கட்டிப்பிடித்து அழுகிறாள். பாரதியும் கண்ணம்மாவின் இந்த செயலை பார்த்து அழுகிறான். உடனே அந்த ஹாஸ்பிடல் முழுவதும் வெடித்து சிதறுவாது போன்று காண்பிக்கின்றனர். பாரதி கண்ணம்மா இருவரும் உயிரோட இருக்கிறார்களா இல்லையா என்று தொடர்ந்து சீரியல் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த ப்ரோமோவை பார்க்கும் ரசிகர்கள் நிறைய கமெண்டுகளை கூறி வருகின்றனர். அதில் ஒருவர், இந்த தீயில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறது என்று போட்டால் எப்படி இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த  மற்றவர்கள் என்னது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று கேட்ட வண்ணம் வருகின்றனர். இது நடக்குமா இல்லையான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்