Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் சீசன் 6 என்ன எல்லாருமே விஜய் டிவி காரங்களாவே இருக்காங்க...!

UDHAYA KUMAR September 19, 2022 & 18:30 [IST]
பிக்பாஸ் சீசன் 6 என்ன எல்லாருமே விஜய் டிவி காரங்களாவே இருக்காங்க...!Representative Image.

கடந்த ஆண்டை விட அதிக விஜய் டிவி பிரபலங்களை களமிறக்கவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்கிற பட்டியலும் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை விட கூடுதல் மவுசு கொண்டது பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதே தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருக்கிறது. 

வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஷூட்டிங் வரும் அக்டோபர் 1ம் தேதியே நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது யார் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இதில் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களே இருப்பதும் ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி,  பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ரோஷினி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார்களாம்.  ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் அர்ச்சனாவும் இந்த சீசன் பிக்பாஸில் கலந்து கொள்ள விருக்கிறாராம். 

சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீநிதி, இன்ஸ்டாகிராமில் கண்ட மேனிக்கு கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள். 

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், ஆதலால் காதல் செய்வீர் படத்தின் நாயகி மனிஷா யாதவ்,  தொகுப்பாளினி அஞ்சனா,  இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருக்கிறார்களாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்