Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்களும் பங்கேற்கலாம் பிக்பாஸ் சீசன் 6 ...! விஜய் டிவியின் புது முயற்சி

UDHAYAKUMAR August 26, 2022 & 17:30 [IST]
நீங்களும் பங்கேற்கலாம் பிக்பாஸ் சீசன் 6 ...! விஜய் டிவியின் புது முயற்சி Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தொடரின் அடுத்த சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நீங்கள்தான். ஆம். விஜய் தொலைக்காட்சியே இதனை அறிவித்துள்ளது. இதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது. 

அக்டோபர் மாத தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்கவுள்ளது. அதில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என பலரது புகைப்படங்களை வைத்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. பலரும் புகைப்படங்களுடன் இவர்கள்தான் அடுத்த சீசன் போட்டியாளர்கள் என வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் டிவிஸ்ட் வைத்துள்ளது விஜய் டிவி. 

விஜய் டிவியில் வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் கந்தசாமி, மாடசாமி, குப்புசாமி என பொதுமக்கள் யாராக இருந்தாலும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

14 போட்டியாளர்களில் 7 பேர் செலிபிரிட்டியாகவும் 7 பேர் போட்டியாளர்களாகவும் இருப்பார்கள் என கூறப்படுகிறது. என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்