Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் நடத்த கமல்ஹாசனுக்கு இத்தனை கோடியா? வெறும் 15 நாள் கால்ஷீட்தான்!

UDHAYA KUMAR Updated:
பிக்பாஸ் நடத்த கமல்ஹாசனுக்கு இத்தனை கோடியா? வெறும் 15 நாள் கால்ஷீட்தான்!Representative Image.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வந்த எபிசோட்கள் மட்டும் மொத்தம் வெறும் 15 நாட்கள் தான் என்கிறார்கள். இந்த 15 நாட்களுக்கும்  கமல்ஹாசன் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றிருக்கிறார். இவரின் மூலம்தான் ரசிகர்கள் அதிக அளவில் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சீசன்களிலிருந்து இவருக்கு நிகரான ஒரு தொகுப்பாளரைத் தேர்ந்தெடுக்க முடியுமா என விஜய் டிவியே வியந்து நிற்கிறது. 

பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு சீசனுக்கும் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது அந்தந்த சீசன்களின் முடிவில் தெரியவரும். அந்த வகையில் இந்த 6வது சீசனில் கமல்ஹாசன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்கிறார். இதுகுறித்த தகவல் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் கமல்ஹாசன்.  முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக நடிகர் சூர்யா இதுபோன்ற ஒரு ரியாலிடி ஷோவைத் தொகுத்து வழங்கியிருந்தார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான நிகழ்ச்சியாக இருந்த பிக்பாஸ், தமிழில் மட்டும் குடும்ப நிகழ்ச்சியாக மாறியுள்ளது. காரணம் ஒவ்வொரு குடும்பமும் மொத்தமாக இருந்து இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கின்றனர். வெற்றிகரமாக சென்று வரும் இந்த நிகழ்ச்சியால் கமல்ஹாசனின் வருமானமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

பிக்பாஸ் நடத்த கமல்ஹாசனுக்கு இத்தனை கோடியா? வெறும் 15 நாள் கால்ஷீட்தான்!Representative Image

கமல்ஹாசன் சம்பளம்!

கடந்த 5 சீசன்களுக்கும் தலா 50 - 55 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த கமல்ஹாசன், இந்த சீசனுக்காக 75 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். இதுபோது இன்னும் பல சலுகைகளும் இதில் அடங்கும் என கூறப்படுகிறது. ஆனால் கால்ஷீட்டை மிகவும் கறாராக வைத்திருப்பவர் கமல்ஹாசன். 4 மணி நேரம் கால்ஷீட் என்றால் அதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். இதனால் பிக்பாஸ் இவரது எபிசோட்களை மிகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து எடிட் செய்ய பெரிய அணியையே வைத்திருந்தது. 

நேற்றுடன் முடிந்த சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்பாக விக்ரமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷிவின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்