Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,202.19
-98.95sensex(-0.13%)
நிஃப்டி23,507.75
-50.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

இன்றே கடைசி; முடிவுக்கு வரும் சன் டி.வி.யின் பிரபல சீரியல்; இல்லத்தரசிகள் சோகம்!

Kanimozhi Updated:
இன்றே கடைசி; முடிவுக்கு வரும் சன் டி.வி.யின் பிரபல சீரியல்; இல்லத்தரசிகள் சோகம்!Representative Image.

சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான ரோஜா இன்றுடன் நிறைவடைய உள்ளது. 2018ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் ரோஜா சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலுக்கு ஏகபோக ஆதரவு கிடைத்ததை அடுத்து, 2019ம் ஆண்டு முதல் 
வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரோஜா சீரியல், 2020ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கார், கல்பனா கதாபாத்திரத்தில் காயத்ரி சாஸ்திரி, அன்னபூர்ணி கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, அனு மற்றும் ப்ரியா ஆகிய கதாபாத்திரங்களில் அக்‌ஷ்யா, டைகர் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ராஜேஷும், அவரது மனைவி செண்பகமாக ஷர்மிளாவும் நடித்து வருகின்றனர். 

தமிழில் ரோஜா சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கன்னடம், தெலுங்கு, மலையாளத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்தில் ‘செவ்வந்தி’ என்ற பெயரியிலும், தெலுங்கில் ‘ரோஜா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘காளிவீடு’ ஒளிபரப்பாகி வருகிறது. 

இன்றே கடைசி; முடிவுக்கு வரும் சன் டி.வி.யின் பிரபல சீரியல்; இல்லத்தரசிகள் சோகம்!Representative Image

ரோஜா கதை சுருக்கம்: 

அனாதை இல்லத்தில் வளர்ந்தா ரோஜா வழக்கு தொடர்பாக அர்ஜுனை சந்திக்கிறாள். அந்த சமயத்தில் அவருக்கும் அத்தை மகள் அனுவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் அனுவை பிடிக்காத காரணத்தால் ரோஜாவிடம் உதவி கோரும் அர்ஜுன், பொய்யாக தனக்கு மனைவியாக நடிக்கும் படி கேட்கிறான். இதற்கு சம்மதித்து அர்ஜுன் குடும்பத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ரோஜா அன்னபூர்ணியின் கோபத்திற்கு ஆளாகிறாள். 

அண்ணனுடன் நடக்க இருந்த திருமணம் நின்று போனாலும் தம்பியை திருமணம் செய்து சொத்துக்களை ஆட்டையைப் போட வேண்டும் என அனு திட்டம் திட்டுகிறாள். ஆனால் அனுவின் ராசி அர்ஜுனின் தம்பியும் வேறு ஒரு பெண்ணை காதலித்து அவளையே திருமணமும் செய்து கொள்கிறான். 

இதனால் நொந்து போன அனு பாட்டி அன்னபூர்ணியின் ஆதரவுடன் ரோஜாவை பழி வாங்க திட்டம் தீட்டுகிறாள். இதில் இருந்து அவளை அர்ஜுன் அடுத்தடுத்து காப்பாற்ற காதல் மலர்கிறது. பிறகு இருவரும் உண்மையான கணவன், மனைவியாக வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்போது தான் ரோஜா தான் உண்மையான அர்ஜுனின் அத்தை மகள் என்பதும், ஒரு விபத்தில் தாயும், சேயும் பிரிக்கப்பட குழந்தை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறது. 

இந்த உண்மை வெளியான பிறகு ரோஜா, அனு இடையே நடந்த மோதலும், போட்டி போட்டிகளும் சோசியல் மீடியாவில் செம்மையாக ட்ரால் செய்யப்பட்டது. போதாக்குறைக்கு ஆள் கடத்தல், திருட்டு பழி சுமத்துவது என சின்னப்பிள்ளைத் தனமான விளையாட்டுக்களும் அரங்கேறியது. குறிப்பாக காகிதம் போன்ற மாஸ்க்கை முகத்தில் வைத்து உயிரற்ற சடலத்தை ரோஜா என பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன் எல்லாம்... வேற லெவலுக்கு பங்கம் செய்யப்பட்டது. ரோஜா சீரியலைப் பார்க்காதவர்கள் கூட சோசியல் மீடியாவில் இந்த சீனை கலாய்க்கும் நிலை உருவானது. 

கடைசியில் உண்மையான பேத்தி ரோஜா தான் என்பதை அறிந்து கொண்ட அன்னபூர்ணி அனுவை வீட்டை விட்டு துரத்திவிட்டாள். இப்போது மற்றொரு வழக்கறிஞரின் வீட்டில் மகளாக தங்கியிருக்கும் அனு அர்ஜுனையும், ரோஜாவையும் பழிவாங்க டிசைன், டிசைனாக பிளான் போடுவது கதைக்களமாக நீடித்து வருகிறது. 

முடிவுக்கு வர காரணம் என்ன? 

ரோஜா சீரியலில் அடிக்கடி ஒரே மாதிரியான சீன்கள் ரீப்பீட் மோடில் இருப்பது போல் ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதேசமயம் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’, ‘கயல்’, ‘வானத்தைப் போல’ சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானதை அடுத்து ரோஜாவுக்கு என்டு கார்டு போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 

இன்றே கடைசி; முடிவுக்கு வரும் சன் டி.வி.யின் பிரபல சீரியல்; இல்லத்தரசிகள் சோகம்!Representative Image

பரபரப்பான இறுதிக்கட்டம்: 

பரபரப்பான இறுதிக்கட்டம்: 

ரொமான்ஸ், குடும்பச் சண்டை, பழிவாங்கும் படலம் என ஒரே டிராக்கில் பயணித்துக்கொண்டிருந்த ரோஜா சீரியல் இப்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அர்ஜுன் குழந்தையை கடத்தி வைத்துக்கொண்டு அர்ஜுன், ரோஜா இருவரையும் கொல்ல வேண்டும் என சாக்‌ஷி திட்டமிட்டுக்கொண்டிருப்பது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

அத்தையின் கணவர் பாலுவை கொன்றதாக அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் காய்ச்சலில் இருந்த அர்ஜுனின் குழந்தையை ரோஜா தனது மாமியார் கல்பனாவுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, நர்ஸ் மூலமாக சாக்‌ஷி குழந்தையை கடத்தி விடுகிறாள். நேற்றைய எபிசோட்டின் படி குழந்தை இருக்கும் இடத்தை தேடிக்கண்டுபிடிக்கும் ரோஜா வாண்டடாக போய் சாக்‌ஷியின் வலையில் சிக்கிக்கொள்கிறார். 

மற்றொருபுறம் “என் குழந்தையை சாக்‌ஷி கடத்தி வச்சியிருக்கா. அவளால என் குழந்தை உயிருக்கே ஆபத்து. என்ன இப்ப வெளிய விடுங்க. குழந்தையை கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் நானே மறுபடியும் வந்து சரணடையுறேன்” என நீதிபதியிடம் கெஞ்சி கூத்தாடி அர்ஜுன் வெளியே வந்திருக்கிறார் (இந்த மாதிரி சீனை எல்லாம் ரோஜா சீரியலில் தான் பாக்க முடியும்)... 

அர்ஜுன் அவரது மனைவி மற்றும் குழந்தையை சாக்‌ஷியிடம் இருந்து மீட்பாரா??... தனது அத்தையின் கணவரை சாக்‌ஷி தான் கொன்றாள் என்பதை நிரூபித்து விடுதலையாவாரா? என்ற விறுவிறுப்பான இறுதி எபிசோட்டை இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்