Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,059.25
-340.53sensex(-0.46%)
நிஃப்டி22,184.25
-88.25sensex(-0.40%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்..! வழக்கம் போல் வெடிக்கும் சரவெடிகள்..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்..!  வழக்கம் போல் வெடிக்கும் சரவெடிகள்..!Representative Image.

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6 தற்பொழுது 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசன் இல்லை மிகவும் போரிங் சீசன் என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தாலும் அதற்கு ரசிகர்கள் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை.

இந்த பிக்பாஸ்  சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முகத்திரையை எல்லாம் கிழித்து எறிந்து விட்டு முழு ஈடுபாட்டுடன் போட்டிகளில் பங்கேற்பதை காண முடிகிறது. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கள் நடைபெற்றதால் போட்டியாளர்களுக்கு இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்ததை பார்க்க முடிந்தது.

இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோக்களில்  வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பட்டங்கள் அளிக்கும் நிகழ்வு நடை பெறுவதை காண முடிகிறது. நாம் நினைப்பதை போல் பிக்பாஸ் வீட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்த தான் இந்த நிகழ்வை வழங்கியுள்ளார். அதாவது மிக்சர் மன்னன், பூமர் அங்கிள், கிரிஞ்சு நாயகன், விசா பாட்டில், வீக் எண்ட் நடிகன் போன்ற பட்டங்களை வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவர்களுக்குள் வழங்கி கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்விற்கு “பி.பி.கிரிட்டிக்ஸ் அவார்டுகள்” என்று பெயரை வைத்து வீட்டில் கழகத்தை பிக்பாஸ் உருவாக்கியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அதே போல் இந்த நிகழ்வில் தங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்களை வாங்க மறுத்து விக்ரமன், அசீம் ஆகியோர் வழக்கம் போல் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபடுவதை காண முடிகிறது.

அதே சமயம் கதிரவன், சிவின் ஆகியோர்  தங்களுக்கு அளிக்கப்பட்ட பட்டங்களை மகிழ்வாக பெற்று கொள்வதை காண முடிகிறது. இந்த ப்ரோமோக்களில் இடம்பெற்ற காட்சிகளை வைத்து நாம் எதுவும் முடிவு செய்து விட முடியாது. எனவே முழு எபிசோடையும் பார்த்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வோம்.

இந்த பிக்பாஸ் சீசனில் புது விதமாக பெரும்பாலான ரசிகர்கள் வார இறுதியில் தொகுப்பாளர் கமல் வரும் எபிசோடை பார்த்தே வாரம் முழுவதும் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு பிக்பாஸ் சீசன்-6 அடி வாங்கி உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்