Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,900.18
-499.60sensex(-0.68%)
நிஃப்டி22,154.10
-118.40sensex(-0.53%)
USD
81.57
Exclusive

வெளிப்படையான நாமினேஷனால் பற்றி எரியும் வீடு! பக்கவா செட்டிங் செய்த பிக்பாஸ்!

Editorial Desk Updated:
வெளிப்படையான நாமினேஷனால் பற்றி எரியும் வீடு! பக்கவா செட்டிங் செய்த பிக்பாஸ்! Representative Image.

விஜய் டிவியின் நேயர்களுக்கு இன்றைய தேதியில் முக்கிய பொழுதுபோக்காக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியானது. அதில் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக வீட்டில் உள்ள அனைவரும் வெளிப்படையாக  நாமினேஷன் செய்யும் படி பிக்பாஸ் கூறினார். இதனைத் தொடர்ந்து ஷிவினை வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் மணிகண்டா மற்றும் மைனா உள்ளிட்டோர் நாமினேட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஷிவின் நாமினேட் ஆனதற்குத் தான் மட்டும் தனித்துவமாகச் சிறப்பாக விளையாடுவதாக எண்ணி வீட்டில் உள்ள மற்றவர்களைக் குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளது காரணமாகக் கூறப்படுவது தெரிய வருகிறது.

அடுத்தாக  விக்ரமன் மற்றும் ஏ.டி.கே, இருவரும் தனலட்மியை மிகுவும் ஆக்ரோஷமாகத்  தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் போட்டியில் விளையாடுவதாகக் கூறி நாமினேட் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் வீட்டின் ஹீரோவாக பார்க்கப்படும் அசீமை, ஷிவின் மற்றும் ரச்சிதா ஆகியோர் வேண்டுமென்றே பல சண்டைகளைப் போடுவதாகவும், அதில் எந்த நியாயமும் இல்லை என்ற காரணங்களை எல்லாம் கூறி நாமினேட் செய்கிறார்கள்.

இறுதியாக மைனாவை அமுதவாணன் நாமினேட் செய்கிறார். அதனால் இருவருக்கும் இடையில் சற்று வாக்குவாதம் நடப்பது தெரிய வருகிறது. மேலும் கடந்த வாரம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் விக்ரமன், ஏ.டி.கே,

அமுதவாணன் மற்றும் மணிகண்டா ஆகியோரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்தாக வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஷிவின் அசீமை பற்றி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையில் சில கருத்துக்களைப் பதிவு செய்கிறார். அதற்கு அசீம் தரப்பிலிருந்து எதிர்வாதம் எழுகிறது.

இந்நிலையில்  பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களான  ஷிவின் மற்றும் அசீம் இந்த வாரம் வெளியேறும் நிலையில் உள்ளதால் தங்களின் அதிரடி ஆட்டத்தை முதல் நாளிலேயே தொடங்கி விட்டன என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

கடைசியாக வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அமுதவாணன் மற்றும் மைனா இருவருக்கும் இடையில் யார் வீட்டில் உள்ள சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக விளையாடுகிறார் என்ற கடும் வாக்குவாதம் நிகழ்கிறது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் முக்கிய போட்டியாளர்கள் மட்டும் இடம்பெற்று உள்ளதால் யார் இந்த வாரம் வெளியில் செல்வார் என்பதைக் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ள  போட்டியாளர்கள் யார் என்பதை முழுமையாக அறிய இன்றைய எபிசோடை காண்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்