Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் கொடுத்த அற்புதமான டாஸ்க்..! வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் குடும்பங்கள்..! மகிழ்ச்சியில் பிக் பாஸ் வீடு..!

Editorial Desk Updated:
பிக்பாஸ் கொடுத்த அற்புதமான டாஸ்க்..! வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் குடும்பங்கள்..! மகிழ்ச்சியில் பிக் பாஸ் வீடு..!Representative Image.

பிக்பாஸ் சீசன்-6 ஆரம்பித்து தொடர்ந்து 78 நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த  சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் மிகவும் போராக தான் உள்ளது என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கருத்து.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு. ஆனால் இந்த சீசனில் பல புதிய மாற்றங்களை செய்தும் பெரிதாக ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு என்ன தான் புதிய டாஸ்க்குகளை கொடுத்தாலும் சரியாக விளையாடாமல் சண்டை மட்டும் தான் போட்டு வந்தார்கள்.

பிக்பாஸ் குழுவினரும் பல வகையில் யோசித்து டாஸ்க் கொடுத்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியாக இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை வீட்டிற்குள் அழைத்து வரும் பிரீஸ் டாஸ்கை கொடுத்து ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளார் பிக்பாஸ் குழுவினர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் போட்டியளர்களின் குடும்பங்கள் வீட்டிற்குள் வருகிறார்கள். குறிப்பாக மைனா அவர்களின் கணவர் மற்றும் குழந்தையும் உள்ளே வந்து ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். அடுத்தாக வீட்டிற்குள் சிவினின் குடும்பத்தாரும், அமுதவாணனின் குடும்பத்தாரும் வருவது தெரிகிறது.

அடுத்தாக வெளியான ப்ரோமோவில் மைனாவிற்கு அவரது கணவர் யோகி சில கருத்துகளை கூறுவதை காண முடிகிறது. இதுவரை அமைதியாக இருந்தது போதும் இறங்கி விளையாடு என்பதை போல் தனது அறிவுரை வழங்குகிறார்.

இறுதியாக வெளியான ப்ரோமோவில் அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கலந்து உரையாடுவதை காண முடிகிறது. அமுதவாணனின் மகன் வீட்டில் உள்ள போட்டியாளர்களை போல் நடித்து காட்டி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். 

இதுவரை வீட்டில் உள்ள போட்டியாளர்கள் எப்படி நடித்திருந்தாலும் தங்கள் குடும்பத்தார் முன்னிலையில் உண்மையாக தான் இருப்பார்கள் என்பதால் இந்த டாஸ்கை சரியான நேரத்தில் பிக்பாஸ் குழுவினர் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் ரசிகர்களை இந்த வாரம் கவர்ந்து விடுவார்கள்  என்பதில் ஐயமில்லை.       

இந்த வாரம் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களின் குடும்பங்கள் வருவதால் ஏற்படும் உரையாடல்கள், மகிழ்ச்சிகள், ஆனந்த கண்ணீர்கள் என அனைத்தையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வதில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்